இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ரன் மெஷினாக செயல்பட்டு வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக அவரது பேட்டிங் ஃபார்ம் உச்சத்தில் தான் இருக்கிறது. பல அணிகளுக்கு எதிராக, பல சிறப்பான பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய கோலி தொடர்ந்து மூன்று விதமான கிரிக்கெட்டிலும் தனது அசாத்தியமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கும் ஆஸ்திரேலிய தொடரில் மூன்று முக்கிய சாதனைகளை அவர் படைக்க வாய்ப்பு உள்ளது. அதன்படி நவம்பர் 27ஆம் தேதி துவங்கும் முதல் போட்டியில் அவர் சில சாதனைகள் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் தோனியின் கேப்டன்சி சாதனை, சச்சினின் அதிகபட்ச சத சாதனை, ரோகித்தின் அதிக சத சாதனை ஆகியவற்றை கோலி முறியடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொடரில் ரோஹித் இடம் பெறாததால் ஒருநாள் போட்டிகளில் அவரின் சாதனையை கோலி எளிதாக முறியடிக்க வாய்ப்புள்ளது. அதன்படி ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 8 சதம் அடித்துள்ளனர். இந்த தொடரில் மூன்று போட்டிகளில் ஒரு சதம் அடித்தால் கூட ரோஹித்தை கோலி மிஞ்சி விடுவார்.

அதுமட்டுமின்றி முதலிடத்தில் இருக்கும் சச்சினை அவர் வீழ்த்த வாய்ப்பு உள்ளது. சச்சின் இதுவரை கோழி ஆஸ்திரேலிய அணிக்காக எதிராக 9 சதங்களை அடித்துள்ளார். இத்தொடரில் இரண்டு சதங்களை அடிக்கும் பட்சத்தில் சச்சினின் சாதனை உடைபடும். அடுத்ததாக கேப்டன் தோனியின் சாதனையையும் கோலி தகர்க்க காத்திருக்கிறார்.

இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் தோனி ஆஸ்திரேலிய அணியை ஒருநாள் போட்டிகளில் 14 முறை வென்றுள்ளார். கோலி 11 வெற்றிகளுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார். எனவே ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் கைப்பற்றினால் 14 வெற்றியுடன் தோனியின் சாதனையை சமன் செய்யவும் விரைவில் அதை தகர்க்கவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.



