எந்த பந்தா இருந்த என்ன. இவரு முன்னாடி எல்லாம் ஒண்ணுதான் – சதமடித்து கோலி சாதனை

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பலத்த எதிர்ப்பார்ப்புடன் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய பங்களாதேஷ் அணி 30.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Rahane 1

- Advertisement -

அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. இதன் காரணமாக இந்திய அணி பங்களாதேஷ் அணியை விட 68 ரன்கள் முன்னிலையில் உள்ளது. அதனைத்தொடர்ந்து தற்போது இந்திய தனது இரண்டாவது நாள் போட்டியை விளையாடி வருகிறது.

இரண்டாம் நாளான இன்று தனது ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியின் வீரர் ரஹானே 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த இந்திய அணியின் கேப்டன் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 27 ஆவது சதத்தை அடித்தார். மேலும் கேப்டனாக தனது 188 இன்னிங்சில் விளையாடும் கோலி 41 ஆவது சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார்.

Kohli-2

இதன்மூலம் பிங்க் பந்தில் முதல் சதம் அடித்த இந்திய என்ற சாதனையும் படைத்தார். இந்திய அணி இரண்டாம்நாள் உணவு இடைவேளை வரை 76 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி பங்களாதேஷ் அணியை விட 182 ரன்கள் முன்னிலையில் உள்ளது இதனால் இந்திய அணி வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement