தோனி இல்ல. இவர் பண்ண ஹெல்ப் தான் என் டெஸ்ட் கேரியரை காப்பாத்திச்சி – மனம்திறந்த விராட் கோலி

Kohli-4

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி இந்திய அணிக்கு 2008 ஆம் ஆண்டு அறிமுகமானாலும் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டது. 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது அறிமுக ஆட்டத்தை விளையாடிய கோலி தற்போது வரை தனது பேட்டிங் பார்மின் உச்சத்தில் இருக்கிறார். ஆனால் இவருக்கும் ஒரு மோசமான காலம் இருந்தது.

Kohli 4

அதாவது 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் இளம் வீரராக இருந்த விராட் கோலி பத்து இன்னிங்ஸ்களில் அதாவது ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனவே அப்போதைய கேப்டனாக இருந்த தோனியின் அணியிலிருந்து இவர் நீக்கப்படுவார் என்று அனைவரும் கூறி இருந்தனர். ஆனால் டோனி கோலிக்கு ஆதரவளித்து தொடர்ந்து விளையாட வைத்தார்.

அதன்பிறகு தனது அந்த தவறை திருத்தி தனது கரியரின் உச்சத்திற்கு சென்ற கோலி அடுத்தமுறை இங்கிலாந்து சென்றபோது பந்துவீச்சாளர்களை திணறடித்தார். தற்போது வரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7240 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறியது குறித்தும் அதற்காக எடுத்த தனிப்பயிற்சி குறித்தும் இப்போது கூறியுள்ளார். இது குறித்து அவர் பிசிசிஐடிவி காக இந்திய அணியின் வீரர் மயங்க் அகர்வாலுடன் பேசியதில் கோலி கூறியதாவது :

kohli 5

2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடர் எனது கிரிக்கெட் வாழ்வில் ஒரு மைல்கல். எல்லா வீரர்களும் நல்ல தொடரை தான் ஒரு மைல்கல் என கூறுவார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை 2014 ஆம் ஆண்டு நடந்த அந்த தொடர்தான் எனது மைல்கல். அந்த தொடரின் மோசமான ஆட்டத்திற்கு பிறகு மும்பையில் உள்ள சச்சின் டெண்டுல்கரின் ஆலோசனை படி பயிற்சியில் ஈடுபட்டேன்.

- Advertisement -

ரவி சாஸ்திரியும், என்னையும், தவானையும் அழைத்து பேசினார். அப்போது நான் சச்சினிடம் ஆடும் பொழுது என்னுடைய இடுப்புப்பகுதி இருக்கும் நிலை குறித்து பேசினேன். அதன்பிறகு அவர் அதனை சரிசெய்து எனக்கு பயிற்சி கொடுத்தார். அதன் பிறகு வேகப்பந்து வீச்சாளர்களை எவ்வாறு முன்னால் சென்று எதிர்கொள்வது, எப்படி ஆடுவது என்ற ஆலோசனைகளும் சச்சின் எனக்கு வழங்கினார்.

sachin-kohli

அவர் எனது இடுப்பு பகுதியை சரி செய்தது மட்டுமின்றி முன்வந்து ஆடுவதற்கு கொடுத்த ஆலோசனைகளே எனது ஆட்டத்தை மாற்றியது. அதன் பிறகு நான் தன்னம்பிக்கை மிக்க பேட்ஸ்மேனாக மாறி அனைத்து நாடுகளிலும் ரன்களை குவிக்க தொடங்கினேன் என்று கோலி கூறினார். மேலும் களத்துக்கு வெளியே கடுமையாக உழைத்து கட்டுக்கோப்பாக இருந்தால் யாரும் நம்மை தோற்கடிக்க முடியாது என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.