முதல் போட்டியில் மட்டுமல்ல இரண்டாவது போட்டியிலும் ரோஹித் கிடையாது – போட்டிக்கு முன் கோலி பேட்டி

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி வெறும் 124 ரன்கள் மட்டுமே குவிக்க இங்கிலாந்து அணி 15 ஓவர்களில் எளிதாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி பெற்றது குறித்து ரசிகர்கள் பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதில் முக்கிய கேள்வி என்னவெனில் ரோகித் சர்மாவை ஏன் அணியில் சேர்க்க வில்லை என்பதுதான். ரோகித் துவக்க வீரராக ஆடாதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் போட்டிக்கு முந்தைய தினம் ராகுல் மற்றும் ரோஹித் தான் துவக்க வீரராக களம் இறங்குவார் என்று கோலி அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று டாஸ் போட்ட பிறகு ரோஹித் முதல் 2 போட்டிகளிலும் ஆட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக தவான் மற்றும் ராகுல் ஆகியோர் விளையாடுவார்கள் என்று கோலி அறிவித்தார்.

Rohith

இந்நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் ரோகித் சர்மா ஏன் விளையாடவில்லை என்பது குறித்தும் அவர் டாஸின் போது பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார். அவருக்கு நாங்கள் இரண்டு போட்டிகளிலும் ஓய்வு அளிக்க உள்ளோம் என்று குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி உலக கோப்பை அருகில் வருவதால் நாங்கள் தயாராக வேண்டிய அவசியம் உள்ளது.

Rohith

அதனால் சில மாற்றங்களைச் செய்து பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் கோலி செய்த மாற்றங்கள் தவறு என்றும் ரோகித் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அசத்தலான பார்மில் உள்ளதால் அவர் நிச்சயம் விளையாடி இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement