இந்திய அணியில் நாளுக்கு நாள் சிக்கல் தொடர்ந்து கொண்டே வருகிறது. முதலில் ஹர்திக் பாண்டியா அணியில் இல்லாமல் காயம் காரணமாக வெளியேறினார் . அதன் பின்னர் அவருக்கு பதிலாக வந்த மாற்று வீரர் ஷிவம் துபே ரன்களை வாரிக் கொடுத்தார்.பின்னர் கேஎல்.ராகுலின் இடம் அவ்வப்போது மாற்றப்பட்டு. தற்போது அவர் கேப்டன் பதவி வரை சென்று விட்டார்

அவ்வளவு மாற்றங்கள் அணியில் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், மேலும் ஒரு சிக்கல் இந்திய அணியில் ஏற்பட்டுள்ளது. ஐந்தாவது டி20 போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய ரோஹித் சர்மாவால் அடுத்த இரண்டு தொடர்களில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இளம் வீரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்ட பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் ஒருநாள் தொடரிலும் துவக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்று விராட் கோலி அறிவித்துள்ளார். இதன் காரணமாக கேஎல்.ராகுல் வழக்கமாக மிடில் ஆர்டரில் களமிறங்குவார் என்று தெரிகிறது.

இதுகுறித்து பேசிய கோலி ப்ரித்வி ஷா நிச்சயமாக துவக்க வீரராக களம் இறங்குவார், இதன் காரணமாக ராகுல் மிடில் ஆர்டரில் இறங்குவார். கீப்பிங் மற்றும் பினிஷிங் வேலையை கேஎல் ராகுல் வெகு சீக்கிரமாக கற்றுக்கொள்ள வேண்டும். ரோஹித் சர்மா இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவு. மூன்று வகையான போட்டிகளிலும் அவர் தொடர்ந்து அசத்தி வருகிறார்.

தற்போது ரோஹித் சர்மா இல்லாத நேரத்தில் பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறக்கப்படுவார்கள். இந்த வாய்ப்பை அவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார் விராட் கோலி.



