நிச்சயம் நீங்க அணியில் விளையாடுவீங்க. வாய்ப்பை கரெக்ட்டா யூஸ் பண்ணிக்கோங்க – கோலி உறுதி

Kohli-1
- Advertisement -

இந்திய அணி நியுஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த 5 போட்டிகளில் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணியை வாஷ்அவுட் செய்து சாதனை வரலாறு படைத்தது இந்திய அணி.

Thakur 3

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நாளை துவங்க உள்ளது. டி20 தொடரின் ஐந்தாவது போட்டியின்போது ரோஹித் சர்மா காயமடைந்தார். இதனால் இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஒரு நாள் போட்டியில் மயங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக இந்திய அணியின் துவக்க இடங்கள் முற்றிலுமாக மாறி உள்ளது. இதுகுறித்து விராட் கோலி இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது : ரோகித் சர்மா காயமடைந்துள்ளார் . இந்த வாய்ப்பினை வீரர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். துவக்க வீரராக புதிதாக மயங்க் அகர்வால் மற்றும் பிரித்திவ் ஷா ஆகியோர் களம் இறங்குவார்கள்.

Shaw

ஏற்கனவே கூறியதைப் போல கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் பினிஷிங் ரோலில் ஆடுவார் என்று கூறியுள்ளார். இதனால் பண்ட் இந்த தொடரில் விளையாடுவது சந்தேகம் என்று தெரிகிறது. மேலும் நிச்சயம் ப்ரித்வி ஷா இந்த தொடரில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆக இருக்கிறார்.

Advertisement