தவறு நடந்து விட்டது மன்னித்து கொள்ளுங்கள். யாரும் பதட்டமடைய வேண்டாம் – ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ஷிகர் தவான் 74 ரன்கள் குவித்தார்.

Rahul

- Advertisement -

அதனைத் தொடர்ந்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சாளர்களை விளாசி 37.4 ஓவர்களில் 258 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் வீரர்களான வார்னர் 128 ரன்களும், பின்ச் 110 ரன்களும் குவித்தனர். ஆட்டநாயகனாக வார்னர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் போட்டி முடிந்து பேட்டியளித்த கோலி தனது நான்காவது இடம் மாற்றம் குறித்தும் கருத்தினை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது : நாங்கள் பலமுறை நான்காவது இடத்திற்கு ஆலோசனைகளை நடத்தி உள்ளோம். தற்போது ராகுல் சிறப்பாக பேட்டிங் செய்து வருவதால் நாங்கள் அணியில் அவருக்கு ஏற்ற இடத்தை தரும் பொருட்டு சில மாற்றங்களை மேற்கொண்டு அதன்படி இன்றைய போட்டியில் நான் நான்காவதாக களம் இறங்கினேன்.

இந்த வாய்ப்பு தவறாகச் என்றாலும் இது எப்படி செல்கிறது என்பதை நாம் சோதித்து பார்த்துதான் ஆகவேண்டும். அதேபோன்று இளம் வீரர்களுக்கான வாய்ப்பையும் நாம் வழங்கி தான் ஆக வேண்டும். இதனால் ரசிகர்களாகிய நீங்கள் பதட்டமடைய வேண்டாம் ஒரு முறை தவறு நடந்து விட்டது இது போன்று இனி நடக்காது என்றும் இது ஒரு சோதனையாகவே நடத்தப்பட்டது என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement