ஒரே இரவில் எதுவும் மாறாது. இதில் எங்களுக்கு எந்த வெட்கமும் கிடையாது – கோலி ஆவேசம்

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 21 ஆம் தேதி வெலிங்டன் நகரில் துவங்கியது. அந்த போட்டியின் நான்காம் நாளான இன்று இந்த ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Ind-1

- Advertisement -

இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய அணியால் 200 ரன்களைக் கூட எட்ட முடியாமல் ரன் குவிக்க திணறியது. டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்திய அணியின் இந்த சொதப்பல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் புகழ்பெற்ற இந்திய அணியின் பந்து வீச்சும் இந்த போட்டியில் சொதப்பியதால் நியூசிலாந்து எந்தவித சலனமும் இன்றி எளிதாக வெற்றி பெற்றது.

இந்நிலையில் செய்தியாளர்களை எதிர்கொண்ட கேப்டன் கோலி கூறுகையில் : நாங்கள் நன்றாக ஆடவில்லை என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் இந்த தோல்வியை பெரிதுபடுத்தி இதிலிருந்து மலையை உருவாக்க நினைத்தால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை நாங்கள் அவ்வாறு நினைக்கவில்லை. இந்த ஒரு தோல்வியுடன் உலகம் முடிந்துவிட்டது என்பதில்லை எங்களை பொறுத்தவரை இந்த போட்டியில் தோல்வி அடைந்து ஆகிவிட்டது.

rahane

இதற்கு அடுத்து என்ன செய்யவேண்டும், அடுத்த கட்டத்துக்கு எவ்வாறு முன்னேற வேண்டும் என்பதை யோசித்து நகர வேண்டியதுதான். உள்நாட்டிலும் ஆடினாலும் சரி நன்றாக ஆடினால் மட்டுமே வெற்றி பெற முடியும். சர்வதேச மட்டத்தில் எதுவும் எளிதாக அமைந்து விடாது ஏனெனில் எந்த ஒரு எதிரணியும் வெற்றிபெற தான் வருவார்கள். மேலும் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வைத்திருக்க வேண்டும்.

Southee 2

வெளியில் பேசப்படும் பேச்சுக்கெல்லாம் செவி கொடுத்தால் இந்திய அணி 7,8ஆம் இடங்களுக்குப் போக வேண்டியதுதான். எனவே வெளியிலிருந்து என்ன பேசுபவர்கள் என்ன பேசினாலும் ஒரு பொருட்டே கிடையாது. ஓரிரவில் ஒரு அணி மோசமாகி விடாது தோற்றத்தை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் அதில் எந்த வெட்கமும் இல்லை. ஆனால் நாங்கள் நன்றாக ஆடவில்லை எங்கள் மனநிலையை விமர்சகர்கள் மாற்ற நினைத்தால் அது வேலைக்கு ஆகாது என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement