கேப்டனாக இருப்பதால் நான் இப்படி செய்வதில்லை. இயல்பாகவே நான் இப்படித்தான் – கோலி வெளிப்படை

Kohli
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கில் உள்ளது. இந்த நேரத்தில் கிரிக்கெட் வீரர்கள் தங்களது சக வீரர்களுடன் சமூகவலைதளத்தில் உரையாடி வருகின்றனர். இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய வர்ணனையாளருமான கெவின் பீட்டர்சன் ஆகிய இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் உரையாடிக் கொண்டிருந்தனர்.

இதற்கு முன்னர் கெவின் பீட்டர்சன், ரோஹித் சர்மா மற்றும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் ஆகியோருடன் உரையாடி இருந்தார். விராட் கோலி மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகிய இருவருக்கும் இடையிலான உரையாடல் மிகவும் சுவாரஸ்யமாக சென்றது. ரசிகர்களுக்கு தெரியாத பல சுவாரஸ்யமான செய்திகளை விராட்கோலி இதில் கூறினார்.

- Advertisement -

கெவின் பீட்டர்சன் கேட்ட கேள்விகளுக்கு மிக இயல்பாகவும் சுவாரஸ்யமாகும் பதிலளித்தார் விராட்கோலி. இந்த நேரத்தில் ஆடுகளங்களில் ஏன் அதிகபட்ச ஆக்ரோஷமாக இருக்கிறீர்கள் என்று கெவின் பீட்டர்சன் கேள்வி எழுப்பினார். இது குறித்து பேசிய விராட்கோலி கூறியதாவது :

kohli 4

நான் கேப்டனாக இருப்பதால் அப்படி வித்தியாசமாக நடந்து கொள்ளத் தேவையில்லை. ஆனால் அந்த ஆக்ரோஷம் இல்லாமல் ஒரு போதும் விளையாட முடியாது. நான் தோனியின் தலைமையில் விளையாடிய போது ஒவ்வொரு கணமும் அவர் என்ன சொல்வார் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். அவர் கூறுவதை முன்னரே செயல்படுத்த விரும்பினேன்.

- Advertisement -

அதே நேரத்தில் நான் கேப்டன் ஆன பின்னர் கேப்டன், என்பதால் மட்டும் வித்தியாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால் ஆக்ரோசமாக ஆட வேண்டும் என்று முடிவு எடுத்து ஆடிக் கொண்டிருக்கிறேன் இவ்வாறு கூறினார் விராட் கோலி.

Kohli

மேலும் கிரிக்கெட் மட்டுமின்றி தனது சொந்த வாழ்க்கை குறித்தும் பல்வேறு கருத்துக்களை கோலி அவருடன் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement