இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி பெங்களூரு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தவான் 36 ரன்கள் குவித்தார் மற்றபடி இந்திய அணி வீரர்கள் ஒருவர்கூட 20 ரன்களை கடக்கவில்லை.
அதன் பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 16.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 140 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா அணி சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டி முடிந்து தோல்வி குறித்து பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது : சரியாக நாங்கள் இந்த சொதப்பலான ஆட்டமான இதைத்தான் எதிர்பார்த்தோம். உலக கோப்பைக்கு முன்பாக நாங்கள் இதற்கான விடையை சரிசெய்தாக வேண்டும். தென் ஆபிரிக்க அணி சிறப்பாக பந்து வீசியது. இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்வது நல்ல விடயம் தான் இருப்பினும் டி20 போட்டிகளில் இலக்கு குறைவாக இருந்தால் சேசிங் என்பது சற்று எளிதான காரியம். ஏனெனில் 40 – 50 ரன்கள் வந்தால் கூட அது நல்ல பார்ட்னர்ஷிப் தான்.
விரைவில் நமது அணியின் சரியான காம்பினேஷனை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். வீரர்கள் உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடிய பின்னர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். அதனை கருத்தில் கொண்டு சிறப்பாக விளையாட வேண்டும். தற்போது சுழற்சிமுறையில் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க விரும்பவில்லை. இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துள்ளோம். இந்த போட்டியில் 9 ஆவது வீரர்கள் வரை நம் மணியால் பேட்டிங் செய்ய முடிந்தது இது ஒரு நல்ல விடயம் என்றே நான் கருதுகிறேன் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.