பாத்தீங்க இல்ல இவரோட பேட்டிங்க. இவர எப்படி அணியில் இருந்து நீக்க முடியும் – வெற்றிக்கு பின் கோலி பேட்டி

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 340 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ஷிகர் தவன் 96 ரன்களையும், இறுதிநேரத்தில் அதிரடியாக விளையாடிய ராகுல் 80 ரன்களை குவித்தனர்.

dhawan 3

அதன்பிறகு 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவர்களில் 304 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற நிலையில் சமன்செய்து உள்ளது. ஸ்மித் 98 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி சார்பில் ஷமி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா தவிர மற்ற அனைவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

- Advertisement -

வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : ராகுல் போன்ற ஒரு வீரரை வெளியில் விடக்கூடாது அவரைப்போன்ற வீரர்கள் அணிக்கு மிகவும் முக்கியம். அவர் எப்படி பேட்டிங் செய்கிறார் என்பதை இன்று நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவருடைய சர்வதேச அளவிலான போட்டிகளில் இது சிறப்பான போட்டியாக நான் நினைக்கிறேன்.

Rahul

அவருடைய இந்த சிறப்பான ஆட்டம் அவருடைய கிளாஸ் மற்றும் முதிர்ச்சியை காண்பிக்கிறது ஓய்வறையில் நாங்கள் எவ்வாறு யோசித்தோமோ அதனையே இன்றைய போட்டியில் செய்துள்ளோம். இந்த இரண்டு போட்டிகளும் தவானுக்கு முக்கியமானது. ஏனெனில் காயத்திற்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் திரும்பியுள்ள அவர் எப்பொழுதும் ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாகவும், நிலையாகவும் ஆடக்கூடியவர். எந்த ஒரு நேரத்திலும் அணியின் சூழலை மாற்றி அமைக்கும் திறமை அவரிடம் உள்ளது.

shami

இந்திய அணியின் துவக்க வீரர்கள் எப்பொழுதும் சிறப்பாகவே விளையாடி வருகிறார்கள் என்றும் ராகுல் ஒரு பல பரிமாண வீரர் என்றும் இந்த போட்டியில் அணி வீரர்கள் விளையாடியது திருப்தி அளிக்கிறது என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement