என்னதான் பண்ணாலும் என்னால் இவரை மிஞ்ச முடியல – கோலி ஆதங்கம்

Kohli

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்த போட்டியின் மூலம் பிங்க் பந்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய கேப்டனாகவும், சதம் அடித்த முதல் இந்திய வீரராகவும் விராட் கோலி சாதனை படைத்து அசத்தினார்.

Kohli 1

இந்நிலையில் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருடன் பயிற்சியில் ஓடுவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டவர் குழுவாக பயிற்சி மேற்கொள்ளுவது சந்தோஷமாக உள்ளது இருப்பினும் ஓடுவதில் ஜடேஜாவை மிஞ்சுவது என்பது முடியாத காரியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியின் மிகவும் பிட்டான வீரர் என்றால் கோலியை அனைவரும் கூறி வருவார்கள். ஆனால் கோலிக்கு இணையாக உடல் தகுதியுடன் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜடேஜா இந்திய அணியின் சிறந்த பீல்டர் என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர். அவரின் ஆட்டம் கடந்த சில ஆண்டுகளாக வேற லெவல் ஃபார்மில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய அணியின் ஒரு மதிப்பு மிக்க வீரராக ஜடேஜா திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் கோலி அவரை பாராட்டி இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -