இரட்டைசதம் அடித்தது மட்டுமல்ல நான் தொடர்ந்து சிறப்பாக விளையாட இதுவே காரணம் – கோலி பேட்டி

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய அடுத்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்தது.

Kohli 4

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலியும், ஜடேஜாவும் தங்களது அசாத்தியமான பேட்டிங் மூலம் இந்திய அணியை சிறப்பான நிலைக்குக் கொண்டு சென்றனர். மேலும் ஜடேஜா சதம் அடிக்கும் வரை காத்திருந்த கோலி இடையில் ஜடேஜா 91 ரன்களில் ஆட்டமிழந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். அப்போது கோலி 254 ரன்கள் குவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ஆட்டம் குறித்து கூறியதாவது : நான் ஒவ்வொரு முறை இரட்டை சதம் அடிக்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் நேற்றைய போட்டியில் நான் இரட்டை சதம் அடித்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்தது. ஏனெனில் கேப்டனாக நான் விளையாடும் இது 50 ஆவது போட்டியாகும்.

Kohli

நான் தொடர்ந்து இப்படி சிறப்பாக விளையாடுவதற்கும், இந்த போட்டியில் இரட்டை சதத்தை அடித்து இதற்கு காரணமாக எனது கேப்டன்சியை நான் நினைக்கிறேன். ஏனெனில் ஒரு கேப்டனாக நான் அணிக்கு தலைமை தாங்கும் போது ஒவ்வொரு போட்டியிலும் எனது சிறப்பான பங்களிப்பை அணிக்கு அளிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடுகிறேன். அந்த எண்ணமே என்னை தொடர்ந்து சிறப்பாக விளையாட வைக்கிறது என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது