இந்திய அணியின் அடுத்த பினிஷர் இவர்தான். தோனியின் இடத்தை நிரப்பும் அதிரடி ஆட்டக்காரர் இவர்தான் – கோலி பாராட்டு

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் முன்னிலையில் இருந்தது, இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் நடைபெற்றது, இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் காயம் காரணமாக விளையாடாததால் மேத்யூ வேட் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக விளையாடினார். நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

nattu

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரரான மேத்யூ வேட் 58 ரன்களும், ஸ்மித் 46 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக தமிழக வீரர் நடராஜன் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 20 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரைத் தவிர மற்ற அனைவரும் ரன்களை சற்று அதிகமாக வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் தவான் 52 ரன்களையும் இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய பாண்டியா 22 பந்துகளில் 42 ரன்களும் குவித்தனர். மேலும் ஆட்டமிழக்காமல் அணியை கடைசி ஓவரில் இரண்டு பெரிய சிக்சர்களை அடித்து பாண்டியா வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.இதன் மூலம் இந்திய அணி டி20 தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

pandya

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் கோலி இந்திய அணியின் முன்னணி அதிரடி ஆட்டக்காரரான ஹர்டிக் பாண்டியா குறித்தும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணிக்கு பாண்டியா 2016ம் ஆண்டு தேர்வான போது அவரது திறமையே முற்றிலும் அவரது தேர்வுக்கான காரணமாக அமைந்தது. தற்போது சில வருடங்களாக விளையாடி வரும் அவர் இந்திய அணியில் தனது இடத்தின் வலிமையே நன்றாக புரிந்து இருப்பார்.

- Advertisement -

அவருடைய நேரம் தற்போது வந்துவிட்டது. இந்திய அணிக்காக பினிஷிங் ரோலில் இனிவரும் பல போட்டிகளை அவர் முடித்து கொடுக்க வேண்டும். மேலும் பல வின்னிங் நாக்குகளை அவர் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று உறுதியாக நம்புகிறேன். அவர் பேட்டிங் செய்யும் பொழுது முழுவதுமாக ரசித்து அந்த போட்டியில் தனது பங்கினை உணர்ந்து விளையாடி வருகிறார். அவருடைய இயற்கையான குணமே அடித்து விளையாடுவதுதான் அதன்படி அவர் தற்போது மிக சிறப்பான லெவலில் விளையாடி வருகிறார் என்று ஹர்டிக் பண்டியா குறித்து விராட் கோலி பேசியுள்ளார்.

Wade

ஏற்கனவே இந்திய அணிக்கு பல ஆண்டுகளாக சிறந்த பினிஷராக இருந்த தோனி தற்போது சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அவரது இடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் தற்போது பாண்டியா அந்த இடத்திற்கு சரியானதாக இருப்பார் என்று பலரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement