இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்க உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இது முக்கியமான தொடர் என்பதால் இரு அணிகளுமே வெற்றி பெற்று தொடரை முன் நிலையை அடைய ஆர்வம் காட்டும். இதனால் இத்தொடரின் மீது உள்ள எதிர்பார்ப்பு இப்போதே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் நாளைய போட்டிக்கான இந்திய அணி இன்று பிசிசிஐ சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதில் முக்கிய தேர்வாக துவக்க வீரர்ப்ரித்வி ஷா அணியில் தேர்வாகியுள்ளார். இந்த தேர்வு பலரையும் கேள்வி எழுப்ப வைத்துள்ளது. ஏனெனில் சமீபகாலமாக பார்ம் அவுட்டில் இருக்கும் ப்ரித்வி ஷா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ரன்களை குவிக்க தடுமாறினார்.
இந்நிலையில் அவரை ஏன் அணியில் சேர்க்க வேண்டும் ? என்ற கேள்விகளை பலரும் எழுப்பி வரும் நிலையில் கேப்டன் கோலி தற்போது ப்ரித்வி ஷா குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : ஆஸ்திரேலிய மண்ணில் ப்ரித்வி ஷாவின் ஆட்டத்தை காண ஆவலாக உள்ளேன். அவரது ஆட்டம் எவ்வாறு அமையப் போகிறது என்பதும் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக அவர் விளையாட போவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அதேபோன்று திறமையான வீரரான சுப்மன் கில்லும் வாய்ப்பு கிடைக்கும் போது தனது திறமையை நிரூபிக்க என்றுதான் நினைப்பார் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நாளைய போட்டியில் அவர் சொதப்பும் பட்சத்தில் இனிவரும் போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என்பதில் சந்தேகமில்லை.