ஹர்டிக் பாண்டியாவை ஏமாற்றினாரா கோலி ? டெஸ்ட் அணியில் ஏற்பட்ட புறக்கணிப்பு – பின்னணி இதோ

Pandya-1

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஜூன் மாதம் 18ஆம் தேதி இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்ப்டன் நகரில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா சேர்க்கப்படாதது அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் வேகப்பந்து ஆல்ரவுண்டரான வீச்சு ஹர்டிக் பாண்டியா இந்திய அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

pandya

அதுமட்டுமின்றி தற்போது கடந்த சில ஆண்டுகளாகவே பேட்டிங்கில் தன்னை மெருகேற்றிக் கொண்டுள்ள ஹர்டிக் பாண்டியா அதிரடி பினிஷராக இந்திய அணியில் உருமாறியிருக்கிறார். இந்நிலையில் தற்போது டெஸ்ட் அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதனை தொடர்ந்து பிசிசிஐயின் தரப்பில் இருந்து வெளியான தகவலின்படி தேர்வுக்குழுவினர் ஹர்டிக் பாண்டியாவின் பந்துவீச்சை அடிப்படையாகக் கொண்டே அவரை அணியில் சேர்க்க வில்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.

- Advertisement -

ஏனெனில் டெஸ்ட் போட்டியில் பாண்டியா விளையாட வேண்டும் என்றால் நிச்சயம் அவர் பந்து வீச தகுதியானவராக இருக்க வேண்டும். தற்போது அறுவை சிகிச்சைக்குப் பின்பு பந்து வீசவில்லை என்பதனால் அவரை தேர்வு செய்ய முடியாது என்றும் அவர் மீண்டும் பந்துவீச அளவிற்கு உடல் தகுதி வந்தால் மட்டுமே அவரை டெஸ்ட் அணியில் நாங்கள் தேர்வு செய்ய முடியும் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது பாண்டியாவின் இந்த நீக்கத்திற்கு பின்னால் கோலி இருக்கிறாரோ என்பது போன்ற செய்திகளும் இணையத்தில் உலவுகின்றன.

pandya 1

ஏனெனில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய தொடரின் போதும் இங்கிலாந்து தொடரின்போது ஒரு சில ஓவர்கள் மட்டுமே பாண்டியா பந்துவீசினார். மேலும் அது குறித்து கேப்டன் கோலி இடம் கேட்கப்பட்ட கேள்விக்கு : நிச்சயம் ஹர்டிக் பண்டியா வருங்காலத்தில் பந்து வீசுவார் என்றும் அவருடைய பணிச்சுமையை குறைப்பதற்காகவே நாங்கள் அவரை தற்போது பந்துவீச அழைப்பதில்லை என்றும் கூறினார். மேலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற ஆடுகளங்களில் ஹர்டிக் பாண்டியா வின் வேகப்பந்து வீச்சு டெஸ்ட் போட்டிகளுக்கு உதவும் என்பதால் அதற்காகவே தற்போது அவரை பந்துவீச வைக்காமல் ஓய்வு கொடுத்து வருகிறோம் என்பது போலவும் கோலி கூறியிருந்தார்.

- Advertisement -

Pandya

கோலி இப்படி டெஸ்ட் போட்டிக்காக பாண்டியாவை பந்துவீச வைக்காமல் இருந்து வருகிறோம் என்று கூறிவிட்டு தற்போது டெஸ்ட் அணியில் அவரை தேர்வு செய்யாமல் இருந்துள்ளது ரசிகர்களிடையே சற்று சலசலப்பை ஏற்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் அவரை பேக்அப் செய்கிறோம் என்று கூறிவிட்டு தற்போது டெஸ்ட் அணியில் இருந்து அவரை நீக்கியுள்ளது சரியாக இல்லை என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement