- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனி ஓகே. ஆனால், நான் அந்த விஷயத்துக்கு சரிப்பட்டு வரமாட்டேன் – கோலி ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாட அமெரிக்கா சென்றுவிட்டது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலியின் ஒரு பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அது யாதெனில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புரோ கபடி போட்டி நிகழ்ச்சி விழாவில் பங்கேற்ற கோலி கபடி விளையாட்டு குறித்தும், கபடி வீரர்கள் குறித்தும் பேசினார். அதில் அவர் இந்திய வீரர்களில் யார் கபடிக்கு சரியாக இருப்பார்கள் என்பது குறித்தும் அவர் பேசினார். தோனி, ஜடேஜா, உமேஷ் யாதவ் ஆகியோர் கபடி விளையாட்டு சரியாக இருப்பார்கள். மேலும் ரிஷப் பண்ட்டும் சரியாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் கபடி விளையாடிற்கு அதிக உடல் வலிமையும், ஆட்டத்திறனும் வேண்டும் இது அவர்களிடம் உள்ளது. மேலும் ராகுல் மற்றும் பும்ரா கூட இந்த விடயத்தில் சரியாக இருப்பார்கள் ஆனால் எனக்கு கபடி அணியில் இடம் வேண்டாம் என்று கோலி ஓபனாக பேசினார். மேலும் அதற்கான விளக்கத்தையும் கோலி கூறினார்.

என்னை அணியில் ஏன் சேர்க்க வேண்டாம் என்றால் கபடி விளையாட்டினை பொறுத்தவரை அவர்கள் என்னை விட வலிமையான வீரர்கள் மேலும் கபடி விளையாட திறன் கொண்ட வீரர்கள் எனவே எனக்கு இந்த விளையாட்டில் இடம் வேண்டாம் என்றும் கூறி கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by