பந்துவீச்சாளர்கள் குறித்து கவலையில்லை. நாங்கள் இதை மட்டும் செய்தால் போதும் – கோலி பேட்டி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜமைக்காவில் சற்று நேரத்துக்கு முன் துவங்கியது.

toss

- Advertisement -

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். பின்னர் இந்த போட்டி குறித்து பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : இந்த போட்டி நிச்சயம் எங்களுக்கு சவாலாக அமையும். ஏனெனில் இந்தப் போட்டியின் முதல் செசன் ஆண்டிகுவாவை போன்று கடுமையான சவாலாக இருக்கும்.

மேலும் முதலில் பேட்டிங் செய்வது எங்களுக்கு ஓரளவு அனுகூலம் தான். ஏனெனில் நாங்கள் முதலில் அதிக ரன்களை குவித்து ரன் கணக்கை அதிகப்படுத்தினால் பந்துவீச்சாளர்களுக்கு அது ஏதுவாக இருக்கும். மேலும் எங்கள் அணியில் இரண்டு பெரிய பார்ட்னர்ஷிப் களை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இரண்டு ஜோடிகள் நிச்சயம் 70 முதல் 80 ரன்கள் அடிக்க வேண்டும் அப்போதுதான் ஒரு பெரிய இலக்கை எங்களால் எதிரணிக்கு நிர்ணயிக்க முடியும்.

Bumrah-1

எங்களுடைய பந்துவீச்சாளர்கள் பற்றி கவலை இல்லை. ஏனெனில் அவர்கள் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். எனவே பேட்டிங் துறையில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவித்தால் பந்துவீச்சாளர்கள் அவர்களுடைய வேலையைப் செய்வார்கள். கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் களமிறங்க உள்ளோம். என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது

Advertisement