அசாத்தியமான ரன்அவுட் மூலம் நியூசி வீரரை வெளியேற்றிய கோலி – வைரலாகும் வீடியோ

Runout
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 347 ரன்களை குவித்த போதிலும் அதனை எளிதாக சேசிங் செய்த நியூஸிலாந்து அணி 2 ஓவர்கள் மீதம் இருக்கையில் 348 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் குப்தில் மற்றும் நிக்கோலஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்தனர். குறிப்பாக நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் ஹென்றி நிக்கோலஸ் 82 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மூலம் அபாரமாக ரன்அவுட் மூலம் வெளியேறினார்.

இந்த ரன் அவுட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பேட்டிங் பீல்டிங் என எப்போதும் ஆக்ரோஷமாக செயல்படும் கோலி இந்த போட்டியில் தனது சிறப்பான பீல்டிங் மூலம் ரசிகர்களை ஈர்த்தார். இருப்பினும் இறுதியில் நியூசிலாந்து அணியின் சிறப்பான பேட்டிங் காரணமாக அந்த அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement