எல்லோருக்கும் 14 நாள் குவாரன்டைன். ஆனா கோலி, ரோஹித், ரவி சாஸ்திரி மட்டும் 7 நாள் – இந்த சிறப்பு சலுகை ஏன் தெரியுமா ?

Kohli
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான 25 பேர் கொண்ட இந்திய அணி ஜூன் மாதம் இரண்டாம் தேதி இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்பட இருக்கிறது. ஜூன் மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடனும், அதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி மோத இருக்கிறது. இந்த நான்கு மாதங்கள் கொண்ட மிகப்பெரிய தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தற்போது மும்பையில் கடுமையான குவாரன்டைனில் இருந்து வருகின்றனர்.

IND

- Advertisement -

அதன்படி இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் மும்பையில் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இங்கிலாந்து சென்று 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடுவார்கள். இதற்காக கடந்த 19ஆம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றினில் இந்திய அணி வீரர்கள் தங்களது தனிமைப்படுத்தல் (14 நாட்களை) துவங்கினர்.

இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பெண்கள் அணிக்கும் போட்டிகள் இருப்பதால் அவர்களும் இந்த பயோ பபுள் வளையத்தில் இணைந்து விட்டனர். இப்படி இரு அணிகளில் உள்ள அனைவரும் 14 நாட்கள் குவாரன்டைனில் 19 ஆம் தேதி முதல் இருக்க இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, ரவி சாஸ்திரி ஆகியோர் நேற்றுதான் அதாவது 25ஆம் தேதி தான் குவாரன்டைனில் இணைந்தனர்.

Shastri

அவர்களுக்கு ஆறுநாட்கள் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அனைவரும் பாதுகாப்பு வளையத்தில் இருக்க இவர்கள் மூவருக்கும் மட்டும் ஏன் இந்த ஆறு நாட்கள் சிறப்பு சலுகை என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அதற்கு காரணம் யாதெனில் ரோஹித், கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகிய மூவரும் மும்பையில் வசிக்கின்றனர். அவர்களது வீடுகள் மும்பையில் உள்ளதால் அவர்கள் ஏற்கனவே தங்கள் வீட்டில் தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்வதாக பிசிசிஐ-யிடம் கோரிக்கை ஒன்றினை வைத்து இருந்தனர்.

Rohith

அதன் காரணமாக பிசிசிஐ அவர்கள் மூவருக்கும் ஆறு நாட்கள் சலுகை அளித்து இருந்தது அதன் காரணமாகவே அவர்கள் தாமதமாக தற்போது இந்திய அணியுடன் இணைந்துள்ளனர். இங்கிலாந்து கிளம்புவதற்கு முன்னதாக மூன்று முறை கொரோனா பரிசோதனை அனைவருக்கும் எடுக்கப்படும் அதில் தொற்று இல்லை என்று உறுதியானால் மட்டுமே இங்கிலாந்து செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement