இரண்டாவது டி20 போட்டி : முதலில் பந்துவீச தீர்மானம் செய்ய இதுவே காரணம் – கோலி பேட்டி

Kohli

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2வது டி20 போட்டி தற்போது அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் துவங்கியுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க இந்த 2ஆவது போட்டியில் எப்படியாவது வெற்றி அடைந்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

சற்று நேரத்திற்கு முன் டாஸ் போடப்பட்டது. பிறகு டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். எப்போதுமே இந்திய அணிக்கு சேசிங்கின் போது ஒரு நல்ல அனுபவம் இருக்கும் என்பதனால் இந்த போட்டியில் கோலி முதலில் பவுலிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தார்.

இந்த போட்டியில் இந்திய அணியில் உள்ள மாற்றங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் கடந்த போட்டியில் சிறப்பான தொடக்கத்தை அளிக்க தவறிய ஷிகர் தவன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அறிமுக வீரராக இஷன் கிஷன் துவக்க வீரராக களமிறங்க உள்ளார். அதேபோன்று சுழற்பந்துவீச்சாளர் அக்சர் படேலுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இணைந்துள்ளார்.

sky 1

இந்நிலையில் டாஸிற்கு பிறகு ஏன் முதலில் பந்துவீச தீர்மானம் செய்தேன் என்பது குறித்தும் கேப்டன் கோலி பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நாங்கள் முதலில் பந்துவீச உள்ளோம். இந்த மைதானம் முதலில் பந்துவீச சாதகமாக இருக்கும் என நினைக்கிறன். எனவே முதலில் பந்துவீசி இங்கிலாந்து அணியை சுருட்ட நினைக்கிறோம்.

- Advertisement -

sridhar 1

உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்தால் பதட்டமாக உணர்வோம். கடைசியாக 3-4 ஆண்டுகளில் புள்ளிவிவரப்படி நாம் சேஸிங்கில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். எனவே இந்த போட்டியில் சேசிங் செய்ய உள்ளோம் என கோலி தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.