ஒருநாள் போட்டிகளில் ஹார்டிக் பாண்டியாவை பந்துவீச அழைக்காததன் காரணம் இதுதான் – கோலி ஓபன்டாக்

pandya
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர்களான ராகுல், ரிஷப் பண்ட், கோலி ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 336 ரன்களை குவித்தது. ராகுல் 108 ரன்களும், பண்ட் 77 ரன்கள் மற்றும் கோலி 66 ரன்கள் என பேட்டிங்கில் அசத்தினார்கள்.

Rahul

- Advertisement -

பின்னர் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி 43.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரரான பேர்ஸ்டோ 124 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 99 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தனர். இந்திய அணி முதல் இன்னிங்சில் பெரிய ரன்குவிப்பை வழங்கியதால் இரண்டாவது இன்னிங்சில் நிச்சயம் அவர்களை சுருட்டை வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இங்கிலாந்து வீரர்களின் அதிரடியான பேட்டிங் காரணமாக இந்திய அணி தோல்வியை தழுவியது. மேலும் இந்த தொடரும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பந்துவீசிய ஹார்டிக் பாண்டியா ஒருநாள் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகளிலும் பந்து வீசவில்லை. மேலும் இரண்டாவது போட்டியின் போது இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தடுமாறுகையில் ஆறாவது பவுலரான ஹார்டிக் பாண்டியாவை ஏன் உபயோகிக்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

pandya

அதற்கு நேற்றைய போட்டியின் போதே பதிலளித்த கோலி அது குறித்து கூறுகையில் : பாண்டியாவின் வேலைப்பளுவை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த டி20 தொடரில் பந்து வீசிய அவரை ஒரு நாள் போட்டிகளில் பணிச்சுமை காரணமாக பந்துவீச வைக்கவில்லை. மேலும் அடுத்து நாம் இங்கிலாந்து சென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறோம். அதற்காக அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பது அவசியம்.

pandya 1

அதன் காரணமாகவே அவரை நான் ஒருநாள் போட்டிகளில் பந்துவீச வைக்கவில்லை. மேலும் அடுத்து வரும் டி20 உலக கோப்பை தொடருக்கும் அவரது பந்துவீச்சு அணிக்கு அவசியம் என்பதாலேயே இந்த ஒருநாள் தொடரில் அவரை அதிகம் அலட்டிக்கொள்ளாமல் முழு உடற்தகுதியுடன் வைத்திருக்கவே அவரை பந்துவீச வைக்கவில்லை என கோலி தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement