அஷ்வினை சேக்கனுனு தான் நெனச்சேன். ஆனா கடைசில – அஷ்வின் நீக்கம் குறித்து பேசிய கேப்டன் கோலி

kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் தற்போது லீட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட் செய்வதாக கூறிவிட்டு கடந்த போட்டியில் விளையாடடிய அதே அணி தான் இந்த போட்டியிலும் விளையாடும் என்று அறிவித்தார். இதன் காரணமாக அஸ்வின் இந்த போட்டியிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Kohli

- Advertisement -

ஏற்கனவே இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட அஸ்வினுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகள் சமூக வலைத்தளங்களில் எழுந்தன. அதிலும் அஸ்வின் ஒரு சாம்பியன் பிளேயர் என்றும் கட்டாயம் அவர் இந்த டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்றும் ஜடேஜாவிற்கு பதிலாக அவரை அணியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

முதல் இரண்டு போட்டியிலும் அஸ்வின் சேர்க்கப்படாததால் எழுந்த அதிர்வலை காரணமாக தற்போது மூன்றாவது போட்டியில் நிச்சயம் அஷ்வின் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய போட்டியிலும் அஸ்வின் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ashwin

இந்நிலையில் இந்த போட்டியில் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து டாஸிற்கு பிறகு பேசிய கேப்டன் விராட் கோலி கூறுகையில் : நாங்கள் அஷ்வினை அணிக்குள் கொண்டு வரலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால் அணியில் நான்காவது வேகப்பந்து வீச்சாளர் இருப்பது எதிரணிக்கு கூடுதல் அழுத்தத்தைப் தரும். இதன் காரணமாகவே நாங்கள் நான்கு வேகப்பந்துகளுடன் விளையாடுகிறோம் என்று தெரிவித்தார்.

Ashwin

அதுமட்டுமின்றி ஜடேஜாவிற்கு இந்த மைதானம் சாதகமாக அமையும் என்றும் அவர் நிச்சயம் நிறைய ஓவர்கள் வீசுவார் என்றும் அஷ்வின் நீக்கம் குறித்து கேப்டன் கோலி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement