ஒரு இரவு முழுவதும் கோலி அழுதார் என்றார் உங்களால் நம்பமுடிகிறதா ? – அவரே வெளியிட்ட சோகக்கதை இதோ

Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. கேப்டனாக பொறுப்பேற்ற இருந்து இந்திய அணி பல சாதனைகளைப் படைத்துள்ளது. இன்னும் ஐசிசி கோப்பையை மட்டும்தான் வெல்லவில்லை .அது மட்டும்தான் மிச்சம். ஆனால் இந்திய அணியை அனைத்து விதமான போட்டிகளிலும் நம்பர் ஒன் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடிக்க செய்தவர்.
சமகாலத்தில் தலை சிறந்த வீரராகவும் இருக்கிறார். கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

Kohli 3

- Advertisement -

2008 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் கோப்பை வென்றவர் இவர். அப்போது இவர்தான் அந்த அணியின் கேப்டனாக இருந்தார். அப்படியே கோப்பை வென்ற கையோடு இந்திய அணிக்குள் இடம் பிடித்தவர். பின்னர் தனது கடும் உழைப்பின் மூலம் தற்போது இவ்வளவு சாதனைகள் படைத்து இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் இருக்கும் விராட் கோழி தனது மனைவி அனுஷ்காவுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். மேலும் தற்போது இந்த ஓய்வு நேரத்தில் அடிக்கடி தனது செயல்பாடு குறித்து விடீயோவினை பதிவிடும் கோலி தற்போது சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஒரு உரையாடலில் தனது சிறு வயதில் தான் ஒரு இரவு முழுவதும் உட்கார்ந்து அழுதது பற்றி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Kohli

எனது வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய சம்பவம் நடந்தது. டெல்லி அணியில் தேர்வாளர்கள் என்னை தேர்வு செய்யாமல் புறக்கணித்தனர். நான் நன்றாக இருந்தேன் ஆனால் என்னை அணியில் சேர்க்கவில்லை. எந்த தவறுமே செய்யாத நிலையில் நான் புறக்கணிக்கப்பட்டேன். அதனால் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

- Advertisement -

அன்று இரவு முழுவதும் என்னால் தூங்கமுடியவில்லை. அதிகாலை 3 மணி வரை கதறி அழுதேன் என்னை ஏன் புறக்கணித்தார்கள் என்று எனது பயிற்சியாளர்களிடம் இரண்டு மணி நேரம் கேட்டுக்கொண்டே இருந்தேன். நான் அழுதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று உணர்ந்து கொண்டேன்.

Kohli-2

அதன் பின்னர் எனது லட்சியத்தை நோக்கி முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு அதன் பின்னர் தான் எனக்கு வாய்ப்பு அங்கீகாரமும் கிடைத்தது. இதனால் எப்போதும் நீங்கள் உங்கள் கனவை நோக்கிய ஈடுபாட்டுடன் செயல்படுங்கள் வெற்றி உங்களுக்கு வந்து சேரும் இவ்வாறு கூறினார் விராட் கோலி. இவரின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement