2002ல் கங்குலி பதிலடி..! 2018-ல் கோலி.! ரூட் பாணியில் பதிலடி கொடுத்த கோலி..!

Kholi
- Advertisement -

கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் தொடரை வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமே 2011 ஆண்டு டிராவிட் தலைமையிலான இந்திய அணி தான் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அதற்கு பின்னர் 2 முறை டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்ற தோனி தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்தது.அதே போல கோலியும் இந்த தொடரில் வென்றுவிட வேண்டும் என்று மிகவும் ஆக்ரோஷமாக இருந்து வருகிறார்.

india
india

இந்நிலையில் நேற்று ( ஆகஸ்ட் 1) பர்மிங்ஹாமில் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் ஆட்டமிழந்த போது இந்திய அணியின் கோலி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி ஸ்டைலில் ஒரு வித்தியாசமான செய்கையை செய்து ஜோ ரூட்டை வழி அனுப்பிவைத்தார்.

- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கண்ணகில் கைப்பற்றியது. அதன் பின்னர் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தவறவிட்டது. ஒருநாள் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் சதமடித்த இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தனது பேட்டை கீழே போட்டு வித்யாசமான செய்கையை செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தனார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் 156 பந்துகளில் 80 ரன்களை எடுத்திருந்த போது அவரை விராட் கோலி ரன் அவுட் செய்தார். அவரின் விக்கெட்டை கைபற்றிய கோலி மூன்றாவது ஒரு நாள் போட்டியின் போது ஜோ ரூட் செய்த அதே செய்கையை செய்து அவரை வழியனுப்பி வைத்தார். விராட் கோலி செய்த இந்த செயல் 2002 ஆம் ஆண்டு கங்குலி செய்த செயலை தான் நினைவூட்டியது.

- Advertisement -

ganguly-flintoff

கடந்த 2002 ஆம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-3 என்ற கணக்கில் சமன் செய்தது. 5 போட்டிகளில் 3-2 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்த நிலையில் இங்கிலாந்து அணி 6 வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை ட்ரா செய்தது. அந்த மகழ்ச்சியில் இங்கிலாந்து அணி வீரர் பிளிண்டாப் டிஷர்ட்டை கழற்றி மைதானத்தில் ஆரவாரம் செய்தார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் ஜூன் மாதம் இங்கிலாந்தில் ,இந்தியா – இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு போட்டி நடைபெற்றது. இந்த தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியது. அந்த மகிழ்ச்சியை பிளிண்டாப் செய்தது போலவே கங்குலி தனது டிஷர்ட்டை கழற்றி சுற்றி இங்கிலாந்து வீரர் பிளிண்டாப்பிற்கு பதிலடி கொடுத்தார். தற்போது கங்குலி ஸ்டைலில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்டிற்கு பதிலடி கொடுத்துள்ளார் கோலி என்று கூறப்பட்டு வருகிறது.

Advertisement