இனிமே இப்படி பண்ணாதீங்க போட்டியை சமமா நடத்துங்க – ஐசிசிக்கு கோரிக்கை விடுத்த கோலி

- Advertisement -

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து இந்தியா இதுவரை 7 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்திய அணி முதன் முதலாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அந்நாட்டு மைதானத்தில் விளையாடி இரண்டு போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றியது.

IND

- Advertisement -

அதனைத் தொடர்ந்து இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று போட்டிகளிலும் தற்போது நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகள் என மொத்தம் 7 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இந்திய அணிக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணி 116 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் கோலி இந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அட்டவணையில் உள்ள குளறுபடியை எடுத்துக் காட்டியுள்ளார். அது யாதெனில் ஒவ்வொரு அணியும் தனது சொந்த மைதானத்தில் ஒரு தொடரையும் மற்றொரு தொடரை வெளிநாட்டு மைதானங்களில் விளையாட வேண்டும். ஏனெனில் அப்போதுதான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பேலன்ஸ் ஆக இருக்கும் இல்லையெனில் அது முறையற்றதாக இருக்கும்.

Ind

ஏனெனில் இதுவரை இந்திய அணி ஒரே ஒரு வெளிநாட்டு டெஸ்ட் தொடரை மட்டுமே விளையாடியுள்ளது. மேலும் அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது மற்றபடி அனைத்துமே இந்தியாவில் நடைபெறுவதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் சமநிலை குறையும் எனவும் இது போல உலக நாடுகள் அனைத்தும் பங்கேற்கும் ஒரு தொடரில் அனைத்து விதிமுறைகளும் சமமாக இருந்தால் தான் வெற்றி முழுமை அடையும் என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது

Advertisement