ரிஷப் பண்ட்டை டி20, ஒருநாள் அணியிலிருந்து கோலி நீக்க இதுவே காரணம் – வெளியான உண்மை தகவல்

Pant

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா சென்று விட்டது. அங்கு டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடர் என மிக நீண்ட தொடர் நடக்க இருக்கிறது. இதற்காக மூன்று விதமான அணிகள் அறிவிக்கப்பட்டு 32 வீரர்கள் ஆஸ்திரேலியா சென்று விட்டனர். ஆஸ்திரேலியா சென்றவுடன் அங்கு சிட்னி நகரத்திற்கு வெளியே இருக்கும் மிகப் பெரிய ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றனர்.

INDvsAUS

விராட் கோலி கேப்டனாக இருக்கும் இந்த அணியில் பெரும்பாலான வீரர்கள் உடற்தகுதியுடன் இருக்கும் வீரர்கள்தான் இருப்பார்கள். குறிப்பாக விராட் கோலி கேப்டனாக மாற்றப்பட்டட்டதிலிருந்து வீரர்களின் உடல் தகுதியில் பெரும் கவனத்தை செலுத்தி வருகிறார். இதன் காரணமாக திறமை இருந்தாலும் வீரர்கள் உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே அணியில் சேர்க்கப்படுவார்கள் என்ற வழக்கத்தினை கோலி கையாண்டு வருகிறார்.

அப்படித்தான் தற்போது ரிஷப் பண்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். ஊரடங்கு காலத்தில் ரிஷப் பண்ட் தனது உடல் எடையைக் கூட்டி விட்டார். இதன் காரணமாக மூன்று விதமான போட்டிகளிலும் ஆடி வந்த அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். மேலும் அந்த இடத்திற்கு கேஎல் ராகுல் வந்திருக்கிறார்.

pant

இதற்கு வலுவூட்டும் விதமாக இந்த வருட ஐபிஎல் தொடரில் ரிஷப்பன்ட் காயம் அடைந்து விட்டார். மேலும் மற்ற விக்கெட்கீப்பர்கள் எல்லாம் இவரை விட நன்றாக ஆடியதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உடல் தகுதியுடன் இல்லாமல் உடல் எடையை கூட்டி விட்டதால் தேர்வுக்குழு அவரை அணியில் இருந்து நீக்கி இருக்கிறது.

- Advertisement -

சொல்லப்போனால் விராட் கோலி இப்படி ஒரு வீரர் தனது அணியில் தேவையில்லை என்று நீக்கியுள்ளதாக ஒரு பேச்சும் அடிபடுகிறது. இது மற்ற இளம் வீரர்களுக்கு எல்லாம் ஒரு பாடமாகவும் அமையும் என்று அவர் நினைத்திருக்கிறார்.