அமெரிக்காவில் கோலிக்கு கிடைத்த வரவேற்பு. ஆரவாரமான ரசிகர்கள் – வீடியோவை வெளியிட்ட பி.சி.சி.ஐ

Kohli-1
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே இன்று முதலாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. முதல் இரு போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

- Advertisement -

ப்ளோரிடா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த முதல் போட்டிக்காக நேற்றைய பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி வீரர்கள் மைதானத்திற்குள் வந்தனர். அப்போது விராட் கோலி மிகப்பெரும் ஆரவாரத்துடன் மைதானத்திற்குள் நுழைந்தார். மேலும் கோலியை கண்ட ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

மேலும் பயிற்சியை முடித்த கோலி இந்திய ரசிகர்களிடம் சென்று ஆட்டோகிராப் வழங்கினார். மேலும் ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டு அவர்களையும் உற்சாகப்படுத்தினார். உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் கோலிக்கு கிடைக்கும் என்ற வரவேற்பு சற்று ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement