பாண்டியாவின் நிச்சயதார்த்த புகைப்படத்தை பார்த்த கோலியின் ரியாக்ஷனை கவனித்தீர்களா ? – விவரம் இதோ

Kohli

இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவின் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு தற்போது இந்தியா திரும்பியுள்ள பாண்டியா மீண்டும் கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய ஏ அணிக்காக விளையாடவும் தயாராகி வருகிறார்.

 

View this post on Instagram

 

Mai tera, Tu meri jaane, saara Hindustan. 👫💍 01.01.2020 ❤️ #engaged

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

இந்நிலையில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு தனது காதலியான நட்டாஷா ஸ்டேன்கோவிக் என்பவரை துபாயில் வைத்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். மேலும் அவர்களின் நிச்சயதார்த்தத்தை மோதிரத்துடன் கூடிய புகைப்படமும் நேற்று இணையத்தில் வெளியாகி வருகிறது. மேலும் பாண்டியாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களது புகைப்படத்தை பகிர்ந்து அவர்களது உறவினை உறுதி செய்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாண்டியாவின் இந்த நிச்சயதார்த்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் லைக் செய்து வாழ்த்துக்கள். என்ன ஒரு சர்ப்ரைஸ் இனிமையான நேரங்கள் இனி உங்களுக்காக காத்திருக்கிறது. கடவுள் துணை இருப்பார் என்று தனது ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.

pandya

மேலும் இந்திய அணியின் முன்னணி வீரரான தோனியின் மனைவி சாக்ஷியும் அவரது புகைப்படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு மேலும் பல முன்னணி வீரர்களும் பாண்டியாவின் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட்டுகளை அளித்து வாழ்த்துக்களை கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -