தோனி தோனி என்று கத்திய ரசிகர்கள். கோபத்தில் பொங்கி எழுந்த கோலி

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 170 ரன்கள் குவித்தும் மோசமான பீல்டிங் காரணமாக தோல்வியடைந்தது.

- Advertisement -

இந்த போட்டிக்கு பிறகு பேசிய கோலி இந்திய அணி மோசமான பீல்டிங் மற்றும் சில எளிதான கேட்சிகளை தவறவிட்டதே இந்திய அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்று விரக்தியுடன் கோலி பேசினார். இந்த இரண்டாவது போட்டியில் புவனேஸ்வர் குமார் வீசிய 5 ஓவரில் மட்டும் 2 எளிய கேட்ச்களை இந்திய கோட்டை விட்டனர்.

அந்த ஓவரில் சுந்தர் ஒரு கேட்ச்யை தவற விட்ட பிறகு உடனே அதற்கு அடுத்து ஒரு எளிதான கேட்ச்சை தனது தவறான கணிப்பின் மூலம் கோட்டைவிட்டார். இந்த கேட்சை பண்ட் கோட்டைவிட்டதும் ரசிகர்கள் தோனி தோனி என்று கூச்சலிட்டனர். இதனை எல்லையில் நின்று கொண்டிருந்த கோலி பார்த்து கோபம் அடைந்தார். மேலும் ரசிகர்களை பார்த்து தேவையில்லாமல் இது போன்று நடந்துகொள்ள வேண்டாம் என்றும் தனது விரக்தியை கோபமாக வெளிப்படுத்தினார்.

கோலியின் இந்த செய்கை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கோலியின் இந்த கோபமான செயல் வைரல் ஆனாலும் இந்த தொடருக்கு முன்பாகவே அவர் பண்ட் ஏதாவது தவறு செய்தால் அவரை தட்டிக் கொடுத்து ஆதரியுங்கள் அதைவிடுத்து தோனி தோனி என்று கத்தினால் அது அவருக்கு கொடுக்கும் அவமரியாதையாக அமையும் எனவே இந்த தொடரில் ரசிகர்கள் பண்டை ஆதரிக்குமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார் அதனை மீறி ரசிகர்கள் அவ்வாறு நடந்துகொள்ளவே கோலி ரசிகர்கள் மீது கோபப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement