Virat Kohli : மற்றொரு உலகசாதனை படைக்க இருக்கும் கோலி – சாத்தியம் ஆகுமா ?

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது

Kohli
- Advertisement -

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் மூன்றாவது போட்டி இன்று 13ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ளது.

india

- Advertisement -

நியூசிலாந்து அணியும் இந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இதனால் இன்றைய இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பினை பெற்றுள்ளது. இருப்பினும் போட்டி மழையால் பாதிக்கப்படுமா என்ற அச்சமும் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இன்றைய போட்டியில் மற்றும் ஒரு சாதனை கைக்கு அருகில் உள்ளது. அதனை இன்று அவர் படைப்பாரா என்பது என்று இன்றைய போட்டி முடிந்த பின்னரே தெரியும். அதன்படி இன்றைய போட்டியில் கோலி 57 ரன்கள் குவித்தால் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். மேலும் இதில் என்ன சிறப்பு அம்சம் என்றால் விரைவாக 11 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார்.

kohli1

கடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின்போது சிறப்பாக ஆடிய கோலி இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்றைய போட்டியின் முடிவிலேயே அவர் இந்த சாதனையை படைக்க அதிக அளவு வாய்ப்பு உள்ளதாக கோலியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement