நரேந்திர மோடியை பின்னுக்கு தள்ளிய கோலி. பிரதமரே இவருக்கு பின்னால தானா ? – புள்ளி விவரம் இதோ

Modi
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை நாளுக்கு நாள் படைத்து வருவதை நாம் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். ஆண்டுக்கு ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோலி தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவோடு கிரிக்கெட்டில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமிலும் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். மொத்தம் 50 மில்லியன்(5 கோடி) மக்கள் அவரை பின் தொடர்கின்றனர். இந்தியர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் இவ்வளவு பாலோவர்களை பெறுவது இதுவே முதன்முறையாகும்.

- Advertisement -

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். மற்ற வீரர்களை போல் அல்லது அவ்வப்போதுதான் தான் என்ன செய்கிறேன், என்றும் எங்கு இருக்கிறேன் எனவும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார். உடற்பயிற்சி செய்யும் வீடியோ தன் மனைவியுடன் எடுத்துக்கொண்டு புகைப்படம் என அனைத்தையும் அதில் அவ்வப்போது அவர் பதிவிடுவது வழக்கம்.

இவ்வாறாக தற்போது அவரை ஐந்து கோடிக்கும் அதிகமான மக்கள் பின் தொடர்கின்றனர். இவருக்கு அடுத்தபடியாக இந்தியர்களில் பிரியங்கா சோப்ரா 49 மில்லியன் உடனும் தீபிகா படுகோன் 44 மில்லியனுடனும் இருக்கின்றனர். இப்பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 34.5 மில்லியன் உடனும் எட்டாம் இடத்தில் உள்ளார்.

Advertisement