சத்தமில்லாமல் பல சாதனைகளை சொந்தமாக்கிய கோலி.! இப்போது “Sehwag”-கை சமன் செய்தார்.!

viru

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில், பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. அதிலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்தார். முதல் இரு போட்டியிலும் தோல்வி அடைந்த இந்திய அணியை, இந்த போட்டி துவங்குவதற்கு முன் அனைவரும் விமர்சித்தனர் என்பது குறிப்பித்தக்கது.

kholi

கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி துவங்கிய இந்த போட்டி, ஆரம்பம் முதல் சுவாரசியம் குறையாமலும் மற்றும் சாதனைகளுக்கு குறைவில்லாமலும் செல்கிறது. குறிப்பாக முதல் ரன் சிக்ஸராக அடித்த பண்ட், பாண்டியாவின் முதல் 5 விக்கெட், இரண்டு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கு மேல் அடித்த கோலி என ஒரே போட்டியில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

இதில் இன்னொரு சாதனையும் இப்போது சேர்ந்துள்ளது. அதாவது நேற்று கோலி அடித்த சதம் அவருடைய 23வது சதமாகும். இதன்மூலம், அதிக சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் கோலி நான்காவது இடத்தினை முன்னாள் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான சேவாக் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார். முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கா (51), இரண்டாவது இடத்தில் டிராவிட் (36), மூன்றாவது இடத்தில் கவாஸ்கர் (34) ஆகியோர் உள்ளனர்.

seh

இந்திய அணியின் கேப்டன் கோலி இதுவரை 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 118 இன்னிங்க்ஸுகள், 5994 ரன்கள், 23சதங்கள் அடித்துள்ளார். மேலும் டெஸ்டில் தனது அதிகபட்ச ஸ்கோராக 243 வாய்த்துள்ளார். மேலும் 6முறை இரட்டைச்சதம் அடித்துள்ளார்.