வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் பயம். உண்மையாக்கிய கோலி. ருசிகர தகவல் – விவரம் இதோ

Simmons
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் என்ற இமாலய இலக்கை அசால்டாக விரட்டி 6 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 94 ரன்கள் குவித்து இந்திய அணியின் கேப்டன் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

kohli 4

இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் கோலி குறித்து கூறிய ஒரு விடயம் நிஜமானது என்று கூறலாம். அது யாதெனில் இந்த டி20 தொடர் துவங்கும் முன் வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர்கள் அவர்களது பந்து வீச்சாளர்களுக்கு ஒரு அறிவுரை வழங்கினார். அதில் கோலியை கண்டு யாரும் பயப்பட கூடாது என்றும் அவருக்கு எதிராக தைரியமாக பந்து வீச வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

மேலும் நீங்கள் கோலியை கண்டு சிறிது பயந்தாலும் கோலி முழுமையாக உங்களை ஆக்கிரமித்து போட்டியில் ஆட்டமிழக்காமல் ரன்களை சேர்ப்பார் என்று கூறி அவர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தார். அவர் கூறியது போலவே நேற்றைய போட்டியில் முதல் 20 – 25 பந்துகள் வரை பொறுமையாக ஆடி வந்த கோலி பிறகு ருத்ரதாண்டவம் ஆடி 50 பந்துகளில் 94 ரன்கள் குவித்து தனது அதிரடி காட்டினார்.#

Kohli 1

தொடர்ச்சியாக ரன்களைக் குவித்து வரும் கோலியை கட்டுப்படுத்த இந்த தொடரின் மீதமுள்ள போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் சிரமப்படுவார்கள் மேலும் கோலியை எவ்வாறு வீழ்த்துவது என்று வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் என்பது மட்டும் உண்மை.

Advertisement