எனக்கு இது மிகப்பெரிய கெளரவம்..! கோலி நெகிழ்ச்சி..! இதற்கு தோனிதான் காரணம்..!

virat

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி , இந்திய அணியின் கேப்டன்களுள் ஒரு சிறப்பான கேப்டனாக விளங்கியவர். இந்திய அணிக்கு மூன்று விதமான கிரிக்கெட் உலக கோப்பைகளை பெற்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றவர். தோனியின் கேப்டன்ஷிப் குறித்து பலரும் புகழ்ந்து பேசிய நிலையில் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் கோலியும் தோனியின் கேப்டன்ஷிப் குறித்து பெருமை பேசியுள்ளார்.
kohli
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனியின் பிறந்தநாளை அவரது மனைவி சாக்ஷி கேக் வெட்டி கொண்டாடினார், தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடி வரும் தோனியின் 37 வது பிறந்தநாளுக்காக, கடந்த ஜூலை 7 ஆம் தேதி இந்திய வீரர்களின் வாழ்த்துகளை வீடியோவாக பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது.

மேலும் இந்திய வீரர்களான தினேஷ்கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, தவான், ரோஹித் ஷர்மா, குல்தீப், சாஹல், ரெய்னா ஆகியோரும் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இந்நிலையில் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த கோலி கோலி கோலியின் கேப்டன்ஷிப் பற்றி புகழாரம் சூடியுள்ளார்.
kohli
கோலி, தோனியின் தலைமையில் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இந்நிலையில் தோனியின் கேப்டன்ஷிப் குறித்து கோலி பதிவிட்டதாவது “இந்த வயதிலும் நீங்கள் பிட்டாகவும், வேகமாகவும் இருக்கிறீர்கள் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து சந்தோசமாக இருக்கிறது. உங்கள் கேப்டன்ஷிப்பில் விளையாடியது கவுரமாக இருக்கிறது. ” என்று தெரிவித்துள்ளார்.