வீடியோ : பும்ரா விக்கெட்டை வீழ்த்துவார் என்று முன்கூட்டியே கணித்த கோலி – இதை கவனிச்சீங்களா ?

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி நேற்று டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

INDvsENG

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் தங்களது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். அதேவேளையில் கோலியின் கேப்டன்சியும் முதல் இன்னிங்சில் அற்புதமாக இருந்தது. அதிலும் ரசிகர்களை கவரும் விதமாக கோலி செய்த ஒரு செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி பட்லர் பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் பும்ரா பந்துவீசும் போது நிச்சயம் அவர் இந்த ஓவரில் அவுட் ஆவார் என்பது போல கோலி பண்டிடம் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ஜாஸ் பட்லர் 7 ஆவது வீரராக களம் புகுந்து 52 வது ஓவரில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது முதல் நான்கு பந்துகளை சிறப்பாக வீசிய ஜஸ்பிரித் பும்ரா ஓடி வருவதைப் பார்த்து நிச்சயம் இந்த ஓவரில் பட்லர் பும்ராவிடம் ஆட்டம் இழந்து விடுவார் என்று ரிஷப் பண்டை நோக்கி பேசிக்கொண்டே இருந்தார். அவர் கூறியது போலவே அந்த பந்திலேயே பட்லர் பும்ரா பந்தில் எட்ஜாகி ரிஷப் பண்ட் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதுகுறித்து வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement