இந்திய அணியின் அடுத்த கீ பிளேயர் இவர்தான். தமிழக வீரரை புகழ்ந்த – விராட் கோலி

Kohli-1
- Advertisement -

14 ஆவது ஐபிஎல் தொடரின் 31-வது போட்டி நேற்று அபுதாபியில் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனான விராட் கோலிக்கு 200-வது ஐபிஎல் போட்டியாக அமைந்தது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி வீரர்கள் பெங்களூரு அணியை படுதோல்வி அடைய வைத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் கோலி முதலில் பேட் செய்வதாக தேர்வு செய்தார். அதன்படி கோலி துவக்க வீரராகவும் களமிறங்கினார்.

RCBvsKKR

- Advertisement -

ஆனால் அவர் நினைத்தபடி பேட்டிங்கில் அவர்களது திட்டங்கள் எடுபடவில்லை. கோலி 5 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேற அடுத்தடுத்து வந்த பெங்களூர் அணி வீரர்கள் அந்த சிக்கலில் இருந்து மீள முடியாமல் இறுதியில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். ஐபிஎல் வரலாற்றில் ஐந்தாவது குறைந்தபட்ச ஸ்கோராக இந்த ரன் குவிப்பு அமைந்தது.

இந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக ஆண்ட்ரே ரசல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதிலும் குறிப்பாக தமிழக வீரரான வருன் சக்ரவர்த்தி பெங்களூரு அணியின் டேஞ்சரஸ் பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல் மற்றும் ஹசரங்கா சச்சின் பேபி ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் கோலி அப்போது தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி குறித்தும் சில விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

varun 1

குறித்து அவர் கூறுகையில் : நான் ஆட்டம் இழந்துவிட்டு அமர்ந்திருந்தபோது வருண் சக்கரவர்த்தி குறித்து பேசிக் கொண்டிருந்தேன். நிச்சயம் “இந்திய அணிக்காக வருண் சக்கரவர்த்தி விளையாடும்போது அவர் கீ பிளேயராக இருப்பார்”. வருண் சக்ரவர்த்தி பந்து வீச்சு அபாரமாக உள்ளது. இளம் வீரர்கள் இதுபோன்று விளையாடுவது இந்திய அணியின் பெஞ்ச் வலிமையை அதிகப்படுத்துகிறது.

varun

நிச்சயம் வருண் சக்கரவர்த்தி இனி வரும் காலங்களில் இந்திய அணியின் முக்கிய வீரராக இருப்பார். இது அதற்கான அறிகுறி தான் என்று அவரைப் பாராட்டி கோலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்திய அணிக்காக ஜூலை மாதம் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி இந்திய அணிக்காக அறிமுகமாகி விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement