டெஸ்ட் கிரிக்கெட்டின் உண்மையான ஆட்டத்தை இவங்க 2 பேரும் இன்னைக்கு காட்டிடாங்க – விராட் கோலி புகழாரம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு முடித்துக்கொண்டது. அதனை தொடர்ந்து தற்போது முதலில் விளையாடிய இந்திய அணி மூன்றாம் நாளில் 336 ரன்கள் குவித்து முடித்துக்கொண்டது. ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 33 ரன்கள் மட்டுமே குறைவாக எடுத்துள்ளது.

Thakur

இந்த போட்டியின் துவக்க வீரர்கள் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் என அனைவரும் விரைவிலேயே விக்கெட்டை இழக்க இவ்வளவு பெரிய ரன்கள் இந்திய அணிக்கு வர காரணமாக இருந்தவர்கள் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் தான் ஏனெனில் ரோகித் சர்மா, கில், புஜாரா, ரகானே, அகர்வால் என முன்னணி வீரர்கள் அனைவரும் 186 ரன்களுக்குள் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் இந்திய அணி குறைவான ஸ்கோர் தான் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் கூட்டணி அமைத்த சுந்தர் மற்றும் தாக்கூர் ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணியை பெரிய ரன் குவிப்புக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் இருவரும் ஜோடியாக 123 ரன்களை குவித்து இந்திய அணிக்கு வலுவான நம்பிக்கை அளித்தனர். இதனால் இந்த போட்டி முடிந்து இவர்கள் இருவருக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

sundar 1

இவர்களது ஆட்டத்தை பார்த்து அசந்துபோன இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவரது ட்விட்டர் பக்கத்தில் இருவரையும் வாழ்த்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் : “களத்தில் அபாரமான பங்களிப்பு மற்றும் நம்பிக்கையை வாஷிங்டன் சுந்தர் மற்றும் தாக்கூர் ஆகியோர் வெளிக்கொண்டு வந்தனர்”. டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆட்டம் இது. நிதானமாக விளையாடிய சுந்தர் மற்றும் தாகூருக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதோடு அவர்களுக்கு கை தட்டுவது மற்றும் சூப்பர் என்ற ஸ்மைலி களை அவர் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போதைக்கு இந்த ஆட்டத்தில் இந்திய அணி 54 ரன்கள் பின்தங்கியுள்ளது மீதம் இரண்டு நாட்கள் என்று உள்ளதால் நாளை முழுவதும் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து இந்திய அணிக்கு 350 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.