4 ஆவது டி20 போட்டியில் இவரது ஆட்டம் பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தது – கோலி பாராட்டு

Kohli-2 Press
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்தது. இந்திய அணியின் இந்த ரன்குவிப்பிற்கு காரணமாக மூன்றாவது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் திகழ்ந்தார்.

sky 2

- Advertisement -

31 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 57 ரன்கள் எடுத்து அசத்தினார். இறுதியில் 3வது அம்பயரின் தவறான தீர்ப்பின் மூலம் அவர் ஆட்டமிழந்தது சர்ச்சையானது. மேலும் இது சூரியகுமார் யாதவிற்கு இரண்டாவது போட்டி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் அவருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக நான்காவது டி20 போட்டியில் அவர் மூன்றாவது வீரராக களம் இறக்கப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட்டில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அசத்திய அவர் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து பெரிய ரன் குவிப்புக்கு செல்ல உதவினார். அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்கள் மட்டுமே குவிக்க 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2 க்கு 2 என்ற கணக்கில் சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.

Sky 1

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தற்போது சூர்யகுமார் யாதவ் இன் சிறப்பான ஆட்டம் குறித்து பாராட்டி பேசி உள்ள கோலி அது குறித்து கூறியதாவது : ஒரு சிறந்த அணிக்கு எதிராக இந்த போட்டி கடினமான ஆட்டமாக இருந்தது. நாங்கள் 180 ரன்களுக்கு மேல் இந்த போட்டியில் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தோம். சூர்யகுமார் யாதவ் அதை செய்து காட்டினார். குறிப்பாக மூன்றாவது வீரராக வந்து விளையாடுவது எளிதானது கிடையாது.

Sky

முதல் போட்டியிலேயே தான் சந்திக்கும் முதல் பந்தில் சிக்சர் அடித்து தொடங்கியதை கண்டு நாங்கள் திகைத்துப் போனோம். தனது வருகையை அவர் முத்திரையாக பதித்துள்ளார். இளம் வீரர்கள் இவ்வாறு அணிக்குள் வந்து தங்களது வாய்ப்பை பயன்படுத்துவதை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று கோலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement