இந்திய அணி தோற்ற போதிலும் இவங்க 2 பேரின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது – விராட் கோலி புகழாரம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர்களான ராகுல், ரிஷப் பண்ட், கோலி ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 336 ரன்களை குவித்தது. ராகுல் 108 ரன்களும், பண்ட் 77 ரன்கள் மற்றும் கோலி 66 ரன்கள் என பேட்டிங்கில் அசத்தினார்கள்.

பின்னர் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி 43.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரரான பேர்ஸ்டோ 124 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 99 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தனர். இந்திய அணி முதல் இன்னிங்சில் பெரிய ரன்குவிப்பை வழங்கியதால் இரண்டாவது இன்னிங்சில் நிச்சயம் அவர்களை சுருட்டை வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இங்கிலாந்து வீரர்களின் அதிரடியான பேட்டிங் காரணமாக இந்திய அணி தோல்வியை தழுவியது. மேலும் இந்த தொடரும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்ட கோலி இந்திய அணி வீரர்களின் பேட்டிங் குறித்தும் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

Rahul

அதில் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தபோது கேஎல் ராகுல் மற்றும் நான் அமைத்த பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது. இந்த போட்டியில் ராகுல் சதம் படித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதே போன்று மற்றொரு இளம் வீரரான ரிஷப் பண்ட் இந்தப் போட்டியை திருப்பி விட்டார் என்றே கூறலாம். ஏனெனில் ஒரு கட்டத்தில் 300 ரன்கள் எங்களுக்கு வரும் என்று எதிர்பார்த்தோம்.

- Advertisement -

rahul

ஆனால் அதனை விட 35 ரன்கள் அதிகமாக வருவதற்கு பண்ட் விளையாடிய அதிரடி ஆட்டம் காரணமாக அமைந்தது. இளம் வீரர்கள் இதுபோன்று விளையாடுவது மிகவும் நல்லது என்று கோலி கூறினார். நான்காவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அறிமுகமாவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ரிஷப் பண்ட்க்கு கோலி வாய்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.