இங்கிலாந்து அணிக்கு எதிரான மகத்தான வெற்றிக்கு காரணம் இவர்கள் தான் – விராட் கோலி மகிழ்ச்சி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. முதல் போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இத்தொடரை இந்திய அணி 1 க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

Ashwin

- Advertisement -

மேலும் முதல் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 சதவீத ரசிகர்கள் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த சிறப்பான வெற்றிக்குப் பிறகு பேட்டியளித்த இந்திய அணி கேப்டன் விராட்கோலி சென்னை ரசிகர்கள் குறித்து பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரசிகர்கள் இல்லாமல் சொந்த நாட்டில் முதல் போட்டியில் விளையாடியது சற்று வித்தியாசமாக இருந்தது.

ரசிகர்கள் இல்லாமல் கேலரிகள் வெறிச்சோடி காணப்பட்டன. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் முதல் போட்டியில் ஒரு சுவாரசியம் இல்லை. எங்களுக்கு எந்த ஒரு வித உத்வேகமும் கிடைக்கவில்லை. ஆனால் இந்தப் போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடியதற்கு ரசிகர்கள் கொடுத்த ஆரவாரமும் உத்வேகமும் தான் காரணம். ஒரு அணியாக எங்களது மனவலிமையை நாங்கள் நிரூபித்துள்ளோம் என்று கூறினார்.

Ashwin 1

மேலும் பேசிய அவர் : சென்னை ரசிகர்கள் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. அவர்கள் மிகவும் புத்திசாலிகள். கிரிக்கெட்டின் புரிதல் சென்னை ரசிகர்களுக்கு அபாரமாக இருக்கிறது. ஒரு பந்து வீச்சாளர் 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ரசிகர்கள் கொடுக்கும் உத்வேகத்தின் காரணமாக தான் சிறப்பாக செயல்படுவார்கள். அந்த வகையில் சென்னை ரசிகர்கள் சிறப்பான உத்வேகத்தை கொடுத்தனர்.

Ashwin

மேலும் இந்திய போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் குறித்து கோலி பேசுகையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பண்ட் மற்றும் அஷ்வினை புகழ்ந்து பேசினார். அது குறித்து அவர் கூறுகையில் : பண்ட் இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் கீப்பிங் என இரண்டிலும் அசத்தலாக செயல்பட்டார். அதேபோன்று அஷ்வினும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தோள் கொடுத்தார் என்று அவர்கள் இருவரையும் புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement