இந்த இளம் வயதில் இவர்களின் முதிர்ச்சி, பக்குவம் என்னை பிரமிக்க வைக்கிறது – கோலி பாராட்டு

Kohli

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 21ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட்டது.

india

இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மூன்று வடிவ கிரிக்கெட் இருக்கும் மீண்டும் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தற்போது கோலி இணையதள நாளிதழுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இப்போது உள்ள வீரர்கள் இளம் வயதிலேயே நல்ல பக்குவத்துடனும் தன்னம்பிக்கையுடனும் போட்டியை விளையாடுகிறார்கள்.

- Advertisement -

ஐபிஎல் போன்ற போட்டிகளில் அவர்கள் இளம் வயதில் பெரிய மக்கள் கூட்டத்தின் இடையே விளையாடும் பொழுது அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுகிறது. மேலும் அவர்களின் முதிர்ச்சியை கண்டு நான் பிரமிப்புடன் பார்க்கிறேன். ஏனெனில் அவர்களின் நேர்த்தியான ஆட்டத்திறன் என்னைக் கவர்கிறது. அதிலும் குறிப்பாக கில், பண்ட் மற்றும் ஐயர் போன்றவர்கள் ஆட்டம் என்னை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.

Pant

iyer

- Advertisement -

Gill

அவர்களின் முதிர்ச்சியும், தன்னம்பிக்கையும் பார்க்கும்போது இனி வரும் போட்டிகளில் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து பெரிய வீரராக மாற்றும் எண்ணமும் உள்ளது. இப்போது இருக்கும் இந்திய அணியில் பாதி பேர் இளம் வீரர்கள் எனவே அவர்கள் தொடர்ந்து ஊக்கப்படுத்த விரும்புகிறோம் என்று கோலி கூறினார்.

Advertisement