என்மீது இவருக்கு நம்பிக்கை அதிகம். நிச்சயம் அதை நான் காப்பற்றுவேன் – குருவை புகழ்ந்த சிஷ்யன்

Kohli
- Advertisement -

மகேந்திர சிங் தோனி 2007ம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கிறார். 2014ஆம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் 2017 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான காண கேப்டன் பதவியில் இருந்து விலகினார் தோனி. அதன் பின்னர் விராட் கோலி இந்த பொறுப்பை ஏற்று அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார்.

Dhoni

இந்நிலையில் தன்னை கேப்டன் ஆக்குவதற்காக தோனி செய்த செயல்களையும் முயற்சிகளையும் பற்றி பேசியுள்ளார் விராட் கோலி. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய விராட் கோலி தோனியுடனான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில்…

- Advertisement -

மகேந்திர சிங் தோனி எப்போதும் தனது பொறுப்புகளை தானே எடுத்துக் கொண்டு சரியாக செய்வார். அவருக்கு தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்ற கனவும் ஆசையும் கிடையாது .ஆனால் அது அவருக்கு ஒரு பொறுப்பு அவருடைய அணியில் நான் எப்போதும் இடம் பிடிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருப்பேன்.

Dhoni

மேலும் எப்போதும் ஆட்டம் எப்படி செல்கிறது என்று நாம் கேப்டனிடம் பேசிக்கொண்டே இருப்போம். அந்தவகையில் தோனியிடம் தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருந்தேன். அவர் பேசுவதை உற்று கவனித்தேன் . நாங்கள் கிரிக்கெட் போட்டிகளைப் பற்றி பல விதமான வித்தியாசமான தந்திரங்களைப் பற்றி ஆலோசிப்போம்.

dhoni

அவருக்குப் பின்னர் நான் ஒரு மிகச்சிறந்த கேப்டனாக இருப்பேன் என்று என்னிடம் நம்பிக்கை வைத்தார். அவரிடமிருந்தே கேப்டன் பொறுப்பை பெற்றுக் கொள்ளும் முன்னர் கேப்டன்ஷிப் தொடர்பான பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் விராட் கோலி.

Advertisement