ப்ராக்டீஸ் மேட்ச்லயே அசத்துறீங்களே. உங்க 2 பேரில் யாரை தேர்வு செய்வது – குழப்பத்தில் கோலி

Kohli
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி வரும் 18ஆம் தேதி ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக கடந்த 3ஆம் தேதி இங்கிலாந்து வந்தடைந்த இந்திய அணி சில நாட்கள் குவாரண்டைனிற்கு பிறகு தற்போது பயிற்சி போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்திய அணி தங்களுக்குள்ளாகவே இரண்டு அணிகளாக பிரித்துக்கொண்டு மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் தற்போது விளையாடி முடித்து உள்ளது.

ind

- Advertisement -

இந்த பயிற்சி போட்டியில் இஷாந்த் சர்மா, சிராஜ், ரிஷப் பண்ட், சுப்மன் கில் மற்றும் ஜடேஜா ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இது தொடர்பான வீடியோவும் பிசிசிஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இந்த பயிற்சி போட்டியின் போது சிறப்பாக பந்துவீசிய சிராஜ் மற்றும் இஷாந்த் சர்மாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட விராட் கோலி அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புகைப்படத்தை பகிர்ந்த கோலி : இந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஒவ்வொரு நாளும் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று சிராஜ் மற்றும் இஷாந்த் ஷர்மாவை புகழ்ந்த படி அந்த பதிவினை இட்டுள்ளார். இவர்கள் இருவரது சிறப்பான பந்து வீச்சும் தற்போது விராட் கோலிக்கு ஒரு முக்கிய சிக்கலை உண்டாக்கி உள்ளது. ஏனெனில் இறுதி போட்டி நடைபெற உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர் உடன் விளையாடினால் நிச்சயம் சிராஜிக்கு வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது.

அப்படி ஒருவேளை சிராஜ் அணியில் இடம்பெற வேண்டுமாயின் இசாந்த் சர்மா வெளியேற்றப்பட வேண்டும். ஆனால் பயிற்சி போட்டியில் இஷாந்த் மற்றும் சிராஜ் என இருவரும் அசத்த தற்போது என்ன முடிவை கையில் எடுப்பது என கோலி குழப்பத்தில் உள்ளார். 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினால் ஜடேஜா அணியில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது.

ind 1

ஆனால் ஜடேஜாவும் பயிற்சி போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் இறுதிப்போட்டிக்கான அணி தேர்வில் கோலிக்கு ஒரு முக்கிய சவால் காத்திருக்கிறது. ஏற்கனவே ஒருபக்கம் இங்கிலாந்து சென்றடைந்த நியூஸிலாந்து அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்று உற்சாகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement