இவங்க ரெண்டு பேர தவிர வேற யாரும் ஒழுங்கா விளையாடல. என்னையும் சேத்து தான் சொல்றேன் – கோலி ஓபன் டாக்

Kohli

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 21 ஆம் தேதி வெலிங்டன் நகரில் துவங்கியது. அந்த போட்டியின் நான்காம் நாளில் இந்த ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Ind-lose

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது : டாஸ் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது . ஆனால் ஒரு பேட்டிங் யூனிட்டாக எவ்வளவு ஆட முடியுமோ அவ்வளவு சரியாக நாங்கள் ஆடவில்லை. எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சரியான அழுத்தம் கொடுக்காமல் விட்டுவிட்டோம்.

முதல் இன்னிங்சில் 230 ரன்கள் எடுத்திருந்தால் இன்னும் வித்தியாசமாக இருந்திருக்கும் . சில விக்கெட்டுகளை எளிதாக கொடுத்துவிட்டோம். முதல் இன்னிங்சின் போது எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாம் எடுக்கும் ரன்கள்தான் ஆட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும். அதிலும் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் முதல் இன்னிங்ஸ் ரன்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். எனவே பேட்ஸ்மேன்கள் பொறுப்பினை உணர்ந்து ஆடவேண்டும்.

Rahane 1

இந்த போட்டியை பொறுத்தவரை ரஹானே மற்றும் அகர்வால் மட்டுமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக விளையாடினார்கள். அவர்களை தவிர நாங்கள் அனைவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இந்த போட்டியில் அவர்களது ஆட்டம் மட்டுமே இந்திய அணிக்கு திருப்தி அளிக்கும் விதமாக இருந்தது என்று கோலி குறிப்பிட்டு பேசினார்.

- Advertisement -
- Advertisement -