இவருக்கு வயசாகிடுச்சி. இனியும் இவர் இந்திய அணிக்கு அவசியமா ? – சீனியர் வீரரை வெளியேற்றவுள்ள கோலி

Kohli-2 Press
- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு தற்போது இந்திய அணியின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மேலும் இந்திய அணியில் பல மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் முதலில் புஜாரா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக விராட் கோலி மூன்றாவது இடத்தில் களமிறங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது புஜாராவுடன் சேர்த்து இன்னொரு சீனியர் வீரரை அணியில் இருந்து ஓரம்கட்ட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

IND

அதன்படி தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெற்று முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் விளையாட இருக்கிறது. இந்த இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே துவக்க வீரர் கில் காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ராகுல் அல்லது அகர்வால் விளையாடுவார்கள் என்று கூறப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் மற்றொரு தொடக்க வீரரான ரோகித் சர்மாவும் தற்போது இங்கிலாந்து தொடருக்கான அணியில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சி ரவி சாஸ்திரி மற்றும் சில அணித் தேர்வாளர்கள் ஆகியோர் இந்த இங்கிலாந்து தொடருக்கான ஆலோசனை ஈடுபடுகையில் கேப்டன் கோலி ரோகித் சர்மா குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

Rohith 2

அதனடிப்படையில் ரோகித் சர்மாவிற்கு இப்போது 34 வயது ஆகிவிட்டது என்றும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இருந்ததைப் போல எப்போதும் இருக்க முடியாது என்றும் கோலி கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ரோகித் ஓடும் போது மூச்சு வாங்குகிறார். இதனால் அவரால் களத்தில் சுறுசுறுப்பாக இயங்க முடியாது எனவே ரோகித் இனியும் தேவையா என்று யோசிக்க தோன்றுவதாக கோலி அந்த ஆலோசனை கூட்டத்தில் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் எதிர்வரும் இங்கிலாந்து தொடரில் ரோகித் சர்மா நிச்சயம் சிறப்பாக விளையாடினாள் மட்டுமே அணியில் தொடருவார் என்றும் ஒரு போட்டியில் சொதப்பினால் கூட அணியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது.

Rohith

34 வயதான ரோகித் இப்போதுதான் துவக்க வீரராக டெஸ்ட் போட்டிகளில் களமிறங்குகிறார். அதனால் இன்னும் எத்தனை ஆண்டுகள் அவரால் சிறப்பாக விளையாட முடியும் என்று தெரியவில்லை என கோலி கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக நிச்சயம் ரோகித் அணியில் இருந்து வெளியேற்றப் பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement