இந்த வருட டி20 உலகக்கோப்பையை ஜெயிக்க இவங்களுக்கு தான் அதிக வாய்ப்பு – கோலி வெளிப்படை

Kohli-4
- Advertisement -

20 ஓவர் உலக கோப்பை டி20 தொடர் சென்ற வருடம் கொரோனா காரணமாக நடைபெறாமல் போனது. எனவே சென்ற வருடம் நடைபெற இருந்த உலக கோப்பை தொடர் இந்த வருடம் இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
உலக கோப்பை தொடருக்கு ஒவ்வொரு அணியும் இப்போதிலிருந்தே தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் இந்த கோப்பையை அந்த அணி வெல்ல அதிக வாய்ப்புள்ளது என்கிற கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர்.அதற்கு யோசித்து பதில் சொன்ன விராட்கோலி இங்கிலாந்து தான் என்றார்.

- Advertisement -

மேலும் பேசி விராட் கோலி , டி20 தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணி தான் நம்பர் 1 அணியாக இருந்து வருகிறது. அந்த அணியில் விளையாடும் 11 வீரர்களும் மிக பலம் வாய்ந்த வீரர்கள். பிரைம் பார்மில் உள்ள அந்த அணி இந்த வருடம் நடைபெற இருக்கும் உலககோப்பையை மிக எளிதாக கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது. இதை அனைத்து நாட்டு அணியினரும் என்னுடன் ஒப்புக்கொள்வார். பேட்டிங் பந்துவீச்சு என இரண்டு பக்கமும் சம பலமாக அந்த அணி விளையாடி கொண்டு வருகிறது.

அந்த அணியை வீழ்த்த மிக போராட வேண்டி வரும். அவ்வளவு எளிதில் அந்த அணியை எந்த அணியும் வீழ்த்திவிட முடியாது. இவ்வாறு இங்கிலாந்து அணி தான் இந்த வருட டி20 உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக உள்ளது என்று கூறி கூறினார். இந்திய அணி கடைசியாக கைப்பற்றிய ஐசிசி உலக கோப்பை எது என்று கேட்டால் அது 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடராகும். அதன் பின்னர் 2014ம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இலங்கையிடம் தோல்வி அடைந்தது.

Eng

பின்னர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் விழுந்தது. அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.

england

எனவே கடந்த சில வருடங்களாகவே கோப்பையை வெல்லும் தாகத்தை இந்திய அணி சற்று அதிகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் கோலி தலைமையில் நடைபெற இருக்கும் முதல் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் இந்த வருடம் விளையாட இருக்கிறது. நிச்சயம் இந்தத் தடவை இந்திய அணி கோப்பையை வென்று தனது கோப்பை தாகத்தை குறைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதற்குமுன் 2007ஆம் ஆண்டு தோனி தலைமையில் ஒரு 20 ஓவர் உலக கோப்பை தொடரை இந்தியா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement