அவர் எவ்ளோ சண்டை போட்டாலும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் – கோலி கூறிய அந்த நபர் யார் தெரியுமா ?

Kohli
- Advertisement -

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகநாடுகள் மட்டுமின்றி இந்தியாவும் பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே சில ஆயிரம் பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த தாக்கத்தின் பாதிப்பினை குறைக்க இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு நிலையில் உள்ளது.

Kohli

- Advertisement -

இந்த நேரத்தைப் பயன்படுத்திய கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். இதில் பலரும் ரசிகர்களுக்கு தெரியாத பல விஷயங்களை பரிமாறிக் கொண்டனர். மேலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பல இந்திய வீரர்களை பேட்டி எடுத்து வருகிறார்.

சமீபத்தில் விராட் கோலியுடன் அவர் இன்ஸ்டாகிராம் லைவில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் பல கேள்விகளை பீட்டர்சன் கேட்டுக்கொண்டிருந்தார். இந்திய அணியால் ஐபிஎல் தொடரில் ஏன் வெற்றி பெற முடியவில்லை? இந்திய அணியின் அடுத்த திட்டம் என்ன? ஊரடங்கு எப்படி சென்று கொண்டிருக்கிறது? என பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

nasar 2

இதே நேரத்தில் விராட் கோலிக்கு பிடித்த வர்ணனையாளர் யார் என்று கேட்டாலர்? அதற்கு பதில் அளித்த விராட் கோலி என்னுடைய எனக்கு பிடித்த வர்ணனையாளர் இங்கிலாந்தில் நாசர் ஹூசைன் தான் என்று அனைவரும் ஆச்சரியப்படும் படி ஒரு பதிலை கூறினார்.

- Advertisement -

Kohli-1

இந்தியாவில் ரவிசாஸ்திரி, ஹர்ஷா போக்லே என பலரும் இருக்கையில் இங்கிலாந்து அணியில் நாசர் ஹுசைனை கூறியுள்ளது ரசிகர்களிடையே சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் அது விராட் கோலியின் தேர்வு, அதனால் யாரும் அவரை கேள்வி கேட்க முடியாது என்பதே நிதர்சனம்.

nasar

மேலும் நாசர் ஹூசைன் இந்திய வீரர்களை அடிக்கடி விமர்சித்து பேசி வரும் வழக்கத்தினை உடையவர். இதனால் அவரை இந்திய ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் பலமுறை தாக்கி பேசிவரும் வேளையில் கோலியின் இந்த பதில் அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement