ரோஹித் சர்மாவை இதற்காகதான் அணியில் சேர்க்கவில்லை. வெளிப்படையாக உண்மையை சொன்ன – கோலி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் சேர்க்கப்படாதது பெரும் சர்ச்சையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது.

Rohith-1

- Advertisement -

இது தொடர்பாக முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்த நிலையில் தற்போது இந்திய அணி கேப்டன் கோலி இந்திய அணியின் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : ரோகித் சர்மா திறமையான வீரர் தான் இருப்பினும் விகாரி ஒரு நடுவரிசை ஆட்டக்காரர் மேலும் அணிக்கு தேவையான பொழுது அவர் பந்துவீசவும்ம் செய்வார். ஆகவேதான் அவரை ஒரு ஆல்ரவுண்டர் முறையில் நாங்கள் அணியில் தேர்வு செய்தோம்.

மேலும் அணித்தேர்வு சார்பில் இதுபோல விமர்சனங்கள் எழுவது சகஜம் தான். ஆனால் அணித்தேர்வு என்பது சூழ்நிலை பொறுத்துதான் அமையும் என்பதை அவர்கள் உணர்வார்கள். மேலும் கேப்டனாக நான் சில முடிவுகள் எடுக்கிறேன். அதில் வெற்றி முடிவுகள் என் கையில் மட்டுமல்ல விளையாடும் அனைத்து வீரர்களையும் கையிலும் உள்ளது. அனைத்து வீரர்களின் பங்களிப்பும் ஒரு வெற்றிக்கு மிகவும் முக்கியம் என்று கோலி கூறி கூறினார்.

vihari

இதற்கு முன்னதாக உலகக் கோப்பை தொடருக்கு பிறகு கேப்டன் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கும் இடையே மோதல் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அப்போதும் சரி இப்போதும் சரி அந்த விரிசல் விடயத்தை கோலி மறுத்து வருகிறார் மேலும் அவர்களுக்கு இடையே நல்ல நட்பு உள்ளது என்றும் கோலி தெரிவித்துள்ளார்.

Advertisement