யார் ஒழுங்கா ஆடுறாங்க. யார் பேட்டிங்கும் சரியில்லை. இதுல டெஸ்ட் சாம்பியன்ஷிப் வேற வருது – கோபப்பட்ட கோலி

kohli
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 22 ஆம் தேதி நாளை வியாழக்கிழமை அன்று துவங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக உள்ளது. எனவே இந்த தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான மற்றும் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஆக அமைய உள்ளது.

Kohli

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தற்போது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் கூறியதாவது : டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகத்திற்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் இந்த சாம்பியன்ஷிப் போட்டிகள் சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் போட்டிகளின் முடிவுகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு முக்கிய பங்களிக்கும் என்பதால் இனிவரும் டெஸ்ட் போட்டிகள் சுவாரசியமாக இருக்கும் என்று கருதுகிறேன். என்னை பொறுத்தவரை இந்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் தரம் உயர்ந்து உள்ளது. மேலும் இந்திய அணியில் பேட்ஸ்மேனாக அனைவரும் ஒன்றிணைந்து சரியாக விளையாடவில்லை தனித்தனியாக ஒரு சில வீரர்கள் மட்டுமே சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

kohli dhoni

பேட்டிங் வரிசை சரியில்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். மேலும் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்வது சற்று கடினம் அதனால்தான் இந்திய அணி வீரர்களால் பேட்டிங் செய்ய சற்று சிரமப் படுகிறார்கள். மேலும் சாம்பியன்ஷிப் என்ற அழுத்தம் வந்திருப்பதால் பேட்டிங் செய்வது மேலும் சவாலாக இருக்கும்.

kohli

ஏனென்றால் ஒவ்வொரு போட்டியின் வெற்றி தோல்வியின் முடிவும் சாம்பியன்ஷிப்பை தீர்மானிக்கும் என்பதால் பேட்ஸ்மென்கள் இனிமேல் மேலும் அழுத்தத்தை சந்திப்பார்கள். இனி வரும் போட்டிகளில் இந்திய அணி கவனத்துடன் விளையாடி வெற்றி பெற வேண்டும் நினைக்கிறேன் என்று கோலி கூறினார்.

Advertisement